டான்சி வழக்கில் புதுக் குழப்பம்
சென்னை:
டான்சி ஊழல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவை ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள் விசாரிக்கவேண்டும் என்று பல்வேறு வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் இந்த வழக்கை விசாரிப்பதில் குழப்பம் எழுந்துள்ளது.
இந்த அப்பீல் மனுவை விசாரிப்பதில் துவக்கத்தில் இருந்தே குழப்பம் நிலவி வருகிறது. நீதிபதி ஜெகதீசன் இந்த மனுவைவிசாரிக்கக் கூடாது என்று சில வக்கீல்கள் ஆட்சேபம் தெரிவித்ததால், அவருக்குப் பதில் நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் இதைவிசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு வக்கீல் வெங்கடபதி வரவில்லை.மேலும் வழக்கு குறித்து ஆராய கால அவகாசம் கேட்டார். இதையடுத்து வருகிற 27ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்த வழக்கை ஒரு நீதிபதி விசாரிக்கக் கூடாது. ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்தான் இதைவிசாரிக்க வேண்டும் என்று பல மூத்த வக்கீல்கள், தலைமை நீதிபதி ஜெயினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள்நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், ஆர்.காந்தி உள்ளிட்ட பல மூத்த வக்கீல்கள் இதுதொடர்பாக கோரிக்கைவிடுத்து அவரிடம் மனு கொடுத்துள்ளனர்.
அவர்களது மனுவில்,ஜெயலலிதா வழக்கு முக்கியமான வழக்கு. இதை ஒரு நீதிபதி விசாரித்தால் நீதித்துறை மீது மக்களுக்குநம்பிக்கை வராது. எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதை விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாகஉத்தரவிட தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உண்டு என்றும் கூறியுள்ளனர்.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி ஜெயின் இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் இதுவரை எந்தமுடிவையும் அவர் தெரிவிக்கவில்லை. எனவே ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை யார் விசாரிப்பார்கள் என்பதில் குழப்பம்எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications