எம்.எல்.ஏ. ஆகாமல் அமைச்சராவது குறித்து சுப்ரீம் கோர்ட் மிக முக்கிய தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

எம்.எல்.ஏ. ஆகாமல் யாராவது அமைச்சர் பதவி ஏற்றிருந்தால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 6 மாத கெடுவுக்குள்ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டும். அவ்வாறு வெற்றிபெறாவிட்டால் அவர் அடுத்த பொதுத்தேர்தல் வரை மீண்டும் அமைச்சராக முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கடந்த 93 நாட்களாக எம்.எல்.ஏ. ஆகாமல் தான் உள்ளார்.எங்காவது ஒரு எம்.எல்.ஏவை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு இடைத் தேர்தலில் அவர் போட்டியிடுவார்என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், இவர் மீது வெறுப்பில் உள்ள மத்திய அரசு இடைத் தேர்தலை அடுத்த 3மாதத்துக்குள் நடத்தாமல் விட்டுவிட்டால், அவர் எம்.எல்.ஏ. ஆக முடியாத நிலை ஏற்படும்.

இதனால், அந்த யோசனையை ஜெயலலிதா கைவிட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ. ஆகாத ஒருவர் 6மாதங்களுக்கு மேல் முதல்வராக நீடிக்க முடியாது என்பதால் 5 மாத முடிவிலேயே பதவியை ராஜினாமாசெய்துவிட்டு சில நாட்கள் கழித்து மீண்டும் முதல்வராக பதவியேற்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.

இந் நிலையில் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள மிக முக்கியமான இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் பெரும் அலையைஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தீர்ப்பின்படி இன்னும் 3 மாத கால அவகாசத்திற்குள் ஜெயலலிதா எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றாகவேண்டும். அவ்வாறு முடியாத பட்சத்தில் அவருக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது. எனவேஅவர் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை மீண்டும் முதலமைச்சராக முடியாது.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரின் மகன் எம்.எல்.ஏ. ஆகாமலேயே அமைச்சரானதை எதிர்த்து போடப்பட்டவழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் வெள்ளிக்கிழமைஇந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கு விவரம்:

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் மகன் தேஜ்பிரகாஷ் சிங் மாநில அமைச்சராக இருந்தார்.அவர் இன்னும் எம்.எல்.ஏ. ஆகவில்லை. ஆனால், 6 மாதம் கழிந்துவிட்டது. ஆனாலும் மீண்டும் அமைச்சராகநியமிக்கப்பட்டுள்ளார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான பெஞ்ச் அந்த மனுவை விசாரித்தது. அந்தபெஞ்ச் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,

சட்டப்பிரிவு 164-ன்படி ஒருவர் எம்.எல்.ஏ ஆகாமலேயே அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்குவழங்கப்பட்டிருக்கும் 6 மாத கால அவகாசத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றிபெற வேண்டும்.

அவ்வாறு வெற்றிபெறாமல் 6 மாதம் முடிந்த பிறகு, சில நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் அவரைஅமைச்சராகத் தேர்ந்தெடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

மேலும், அந்த நபர் 5 வருடங்களுக்கு (அதாவது அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை) மீண்டும் அமைச்சராகமுடியாது. இவவாறு சட்டப்பிரிவு 164 -ல் கூறப்பட்டுள்ளது.

எனவே அவர் மீண்டும் அமைச்சராக்கப்படுவதை அனுமதிப்பது சட்டப்பிரிவு 164 -க்கு எதிரானதாகவும் அதைசீர்குலைப்பதாகவும் அமைந்துவிடும் என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த கெடு முடிய இன்னும் 3 மாதங்கள் தான் உள்ளன.

அதற்குள் ஏதாவது ஒரு தொகுதி எம்.எல்.ஏ. ராஜினாமா செய்யவேண்டும். அதில் இடைத் தேர்தல் நடத்த தேர்தல்கமிஷன் தேதி அறிவிக்க வேண்டும். அதில் ஜெயலலிதா வெற்றிபெற்றுக் காண்பிக்க வேண்டும் என்ற நிலையில்ஜெயலலிதா இருக்கிறார்.

மேலும் டான்சி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் என்பதால தான் ஜெயலலிதாவின் 3 வேட்பு மனுக்களும்கடந்த தேர்தலில் தேர்தல் கமிஷனால் நிராகரிக்கப்பட்டன. இப்போது இடைத் தேர்தலை தேர்தல் கமிஷன்அறிவித்தாலும் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தால், அதை தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.

டான்சி தொடர்பான ஜெயலலிதாவின் அப்பீல் வழக்கு 27ம் தேதி தான் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில்ஜெயலலிதா குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டால் தான் மேற்கொண்டு அவரால் தேர்தலில் போட்டியிடமுடியும்.

இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலுக்கு, குறிப்பாக ஜெயலலிதாவுக்கு, மிகவும்பொருத்தமானதாக தற்செயலாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+