இந்திய விமான பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை பயணம்
சென்னை:
இலங்கை விமான நிலையத்தில் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்திய விமானநிலையங்களை பார்வையிட்டு இலங்கை விமானத்துறை அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்துவதற்காக இந்திய விமானத்துறையின் பாதுகாப்பு அதிகாரிகள்குழு ஒன்று இலங்கை சென்றுள்ளது
இதுபோன்ற தாக்குதல்கள் இந்தியாவிலும் நடக்கலாம் என்பதால் இது குறித்துவிவாதிக்க இந்திய விமானத்துறையின் பாதுகாப்பு அதிகாரிகள் குழு இன்று இலங்கைசென்றுள்ளது. இந்தக் குழுவில் 6 பேர் இடம் பெற்றுளள்ளனர். இந்த குழுவுக்கு இந்தியவிமானத்துறை கமிஷனர் வி. அய்வாலி தலைமை வகிக்கிறார்.
இவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கைவிமான நிலையத்தில் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்திய இடத்தைபார்வையிடுவோம். மேலும் இலங்கையில் பல உயர் அதிகாரிகளையும் சந்தித்துபேசவுள்ளோம்.
அப்போது விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைவுதான் புலிகளின்தாக்குதலுக்கு காரணமா என்பது குறித்து விவாதிப்போம். மேலும் தற்போதுபோட்டப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும் விவாதிப்போம்.
இதனடிப்படையில் அறிக்கை தயாரித்து அதை மத்திய அரசிடம் ஒப்படைப்போம்என்றார்.












Click it and Unblock the Notifications