திமுக ஆட்சியில் படு மோசமானது தமிழக நிதி நிலை- அதிமுக குற்றச்சாட்டு
சென்னை:
தமிழக சட்டசபையில் 2001-2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தமிழக நிதிஅமைச்சர் பொன்னையானால் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கடந்த 5 ஆண்டு காலததில் (திமுக ஆட்சியில்) தமிழகத்தின் நிதி நிலை கவலைஅளிக்கத்தக்க அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என்று தமிழக நிதி அமைச்சர்பொன்னையன் கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட்டுடன் வெள்ளை அறிக்கை ஒன்றையும் பொன்னையன் சட்டசபையில்சமர்ப்பித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் (1996-2001) தமிழகத்தின் நிதிநிலை மிகவும்மோசமடைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது 1996-2001 ஆண்டு காலகட்டத்தில்தான் தமிழக அரசின் வருவாய் மிகவும் குறைந்துள்ளது. அரசின் வரி இல்லாவருவாய் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. அதில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.
சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றால் அரசுக்கு அதிக செலவுஏற்பட்டுள்ளது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
2000-2001ம் ஆண்டு பட்ஜெட்டில்தான் மிக அதிகமான அளவு துண்டு விழுந்துள்ளது.
1990-1991ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ 1,126 கோடிதான் பற்றாக்குறை விழுந்தது.1995-1996ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ 1,225 கோடிதான் பற்றாக்குறை இருந்தது.
ஆனால் 2000-2001ம் ஆண்டு பட்ஜெட்டில் (அதாவது, தி.மு.க. ஆட்சியின் கடைசிபட்ஜெட்டில்) மிக அதிக அளவாக ரூ 5,781 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது.
இது கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தின் நிதி நிலை எவ்வளவு வீழ்ச்சிஅடைந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
தமிழக அரசின் நிதிநிலையை மேம்படுத்தி மீண்டும் நிதிநிலையை சீர்படுத்த பல நீண்டகால திட்டங்கள் தேவைப்படுகின்றன. அந்தத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்றார்பொன்னையன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications