மோட்டார் சைக்கிள், கார்களுக்கு வரி அதிகரிப்பு
சென்னை:
பொழுதுபோக்கு கிளப்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வாகனங்கள் மற்றும் எவர் சில்வர் சாமான்களுக்கு வரிவிகிதம்அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் பொன்னையன் அதிமுக அரசின் முதல் பட்ஜெட்டை சனிக்கிழமை சட்டசபையில் தாக்கல்செய்தார்.
அதில் வரி விகிதத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் விவரம் வருமாறு:
ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் ரூ.25 கோடி வரை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை வரியில் ஒருசதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்நோ பவ்லிங், பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் ஆகிய விளையாட்டு கிளப்களுக்கு இதுவரை வரிவிதிப்பு ஏதும்இல்லாமல் இருந்தது.
இந்த பட்ஜெட்டில் இந்த வினைளயாட்டு கிளப்களுக்கு 20 சதவீத கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.
(முன்னாள் முதல்வர கருணாநிதியின் பேரனும், சென்னை மேயர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி சென்னையில்இது போன்ற கிளப்பை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)
மேலும் மாநிலத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு , சில பொருட்களுக்கு நுழைவு வரிவிதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தெந்த பொருள்கள் என்பதற்கான அறிவிப்பு அவ்வப்போதுவெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2,3 மற்றும் 4 சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எவர் சில்வர் சாமான்கள்(வீட்டு உபயோகப் பொருட்கள் நீங்கலாக) போன்றவற்றிற்கு விற்பனை வரி 8 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
புல்டோஸர்கள் போன்ற வாகனங்களுக்கு வரி அதிகரிக்கப்படவில்லை. கைவினைப் பொருட்களுக்கும் வரிஅதிகரிக்கப்படவில்லை.
மேலும் விற்பனை வரிச் சட்டத்தில் "டி" பிரிவில் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்திற்கும் விற்பனை வரி 4சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 8சதவீத வரியில் மாற்றம் எதுவும் இல்லை.
அதேபோல் சூடத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் 4 சதவீத வரியில் எந்த மாற்றமும் இல்லை.
பட்டு மற்றும் பருத்தி போன்ற பொருட்களுக்கு வரி 11 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications