ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு
சென்னை:
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பொன்னையன் சனிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான திட்டத்திற்கு ரூ. 165 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில்அறிவுத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
தொலைதூர பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க போதுமான ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள பெற்றோர்ஆசிரியர் சங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்படும்.
கல்வியை மேம்படுத்த மாநிலத்தில் உள்ள 100 நடு நலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகவும், 125 உயர் நிலைப்பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தகுதி உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளுக்கான தேர்வில் பெண்கள் சிறப்பாக கலந்து கொள்வதற்கு வசதியாக சென்னை, மதுரையில் பெண்களுக்கானபயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் தமிழக வீரர்களுக்கு அரசு சீருடைப் பணிகளில் சேர 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
உலக அளவில் விளையாடும் திறன் படைத்த வீரர்களை அடையாளம் கண்டு கொள்ள புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
சென்னை ஹாக்கி ஸ்டேடியத்தில் ஒளிவிளக்குகள், செயற்கைப் புல் தரை ஆகியவை அமைப்பது குறித்து நடவடிக்கைஎடுக்கப்படும்.
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு முறையே தலா ரூ. 1 கோடி, 50 லட்சம்மற்றும் ரூ. 25 லட்சம் வழங்கப்படும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவற்றைப் பெறுவோருக்கு முறையே ரூ. 20 லட்சம், ரூ. 15 லட்சம், ரூ. 10 லட்சம் பரிசுவழங்கப்படும்.
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இப் பதக்கங்களைப் பெறுவோருக்கு ரூ. 1 லட்சம், ரூ. 50,000, ரூ. 25,000 வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications
