தர்மபுரி மாவட்டம் 2 ஆக பிரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்றுதமிழக சட்டசபையில் சனிக்கிழமை மாநில நிதியமைச்சர் சி.பொன்னையன் அறிவித்தார்.
2001-2002ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கையை நிதியமச்ைசர் பொன்னையன் சனிக்கிழமை காலை 10.30மணியளவில் அவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அமைச்சர் பேசியதாவது:
- தோட்டக்கலை மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்த புதிதாக வேளாண் வணிகத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்படும்.
- 20 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்படும். இத் திட்டத்தின்படி தரிசு நிலங்களில் எண்ணெய் வித்துக்கள் நடுவது, மரங்கள் நடுவது, நறுமணச் செடிகளைப் பயிரிடுவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
- நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவியுடன் புதிய திட்டம்.
- கால்நடைகளுக்கு உயிர் நாடியான மேய்ச்சல் நிலங்களில் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் அரசு உத்தரவைப் பெற்றே மேய்ச்சல் நிலங்கள் மாற்றப்பட வேண்டும்.
- கால்நடைப் பராமரிப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு ரூ. 3.36 கோடி செலவில் பயிற்சி அளிக்கப்படும். தமிழகம் முழுவதிலும் 336 ஊராட்சிகளில் இது அமல்படுத்தப்படும்.
- கால்நடைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கிராமப்புறங்களில் இளைஞர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து, இளைஞர்களிடையே சுய தொழில் மற்றும்
- தன்னம்பிக்கையை வளர்க்க உதவி செய்யப்படும்.
- மகளிர் சிறு கடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊராட்சி அலுவலகங்கள் அருகே ரூ. 60,000 மதிப்பில் அலுவலகங்கள் கட்டித்தரப்படும். அதன்படி ஆண்டுக்கு 4000 அலுவலகங்கள் கட்டப்படும்.
- சட்டசபை உறுப்பினர் நிதியாக தற்போது ரூ. 77 லட்சம் வழங்கப்படுகிறது. இதை ரூ. 82 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 192.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் காடு வளர்ப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 75,250 ஹெக்டேர் நிலப்பரப்பில் வனத் தோட்டங்கள் அமைக்கப்படும் என்றார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications