பிலிப்பைன்ஸ் ஓட்டலில் பயங்கர தீ: 75 பேர் பலி
மணிலா:
பிலிப்பைன்ஸ், மணிலாவுக்கு அருகே உள்ள கியோசோன் நகரில் உள்ள ஓட்டல்ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கிருஸ்துவ மத கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த 75 பேர்உயிரிழந்தனர்.
மணிலாவின் பல கிராமப் புறங்களிலிருந்தும் கிறிஸ்தவ மத கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக கியோசோன் நகரில் உள்ள 6 மாடி ஓட்டல் ஒன்றில் கூடியிருந்தனர்.
அதிகாலை 4.30 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை 2.00 மணி) மின்சாரகோளாறு காரணமாக ஓட்டலின் 3வது மாடியில் தீ பிடித்தது. அந்த தீ மிக வேகமாகஓட்டலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
விபத்தில் 75 பேர் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இவர்களில் பலரும் 30வயது முதல் 40 வயது மதிக்கத்தவர்கள். பல குழந்தைகளும் இறந்து போனார்கள்.
தீ கொழுந்து விட்டு எரிந்த காரணத்தால் பெரும் புகை மூட்டம் கிளம்பியது. இந்த புகைமூட்டம் மத கூட்டம் நடந்த அறைக்குள்ளும் பரவியது. இதனால் ஏற்பட்ட மூச்சுதிணறலாலும், தீயிலிருந்து தப்பிக்க வழி ஏதும் இல்லாததாலும் அவர்கள் இறந்தனர்.
முன்னதாக மாடியில் தீயில் சிக்கியவர்கள் கீழே வர இயலாமல் பெரும் மரண ஓலத்தைஎழுப்பியவண்ணம் இருந்தனர். இந்த அழுகுரல்கள் இதயத்தை கனக்கச்செய்துவிட்டன. ஆனால், தீ பயங்கரமாக எரிந்ததால், அவர்களை காப்பாற்றதீயணைப்புப் படையினர் கூட செல்ல முடியவில்லை.
தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடித்தான் தீயை அணைத்தனர் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications