சென்னை தீ விபத்தில் குழந்தை சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் குடிசைக்குள் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தை நித்யா கருகி இறந்தாள். 100-க்கும் மேற்பட்ட குடிசைகள் கருகி சாம்பலாயின.
இந்த தீவிபத்தில் குமார் என்பவரின் வீட்டைச் சேர்ந்தவர்களும் வெளியே ஓடிவந்தனர். ஆனால் அவசரத்தில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த குமாரின் குழந்தை நித்யாவை அனைவரும் மறந்து விட்டனர். இதனால் குடிசையில் பரவிய தீயில் கருகி நித்யாபரிதாபமாக இறந்தாள்.
சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த விபத்தில்100-க்கும் மேற்பட்ட குடிசைகள் சாம்பலாயின. ஒரு பெண் காயமடைந்தார்.
தீவிபத்தில் வீடுகளை இழந்த குடிசைவாசிகள் மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications