இலங்கை: 38 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய முடிவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை அடுத்து 38 அமைச்சர்கள் ராஜினாமா செய்யமுன்வந்துள்ளனர்.

இதற்காக இந்த 38 அமைச்சர்களும் தேதி குறிப்பிடாமல் தங்கள் ராஜினாமா கடிதங்களை அதிபர் சந்திரிகாவிடம்கொடுக்க முன்வந்துள்ளனர்.

இலங்கையில் ஆளும் மக்கள் கூட்டணி அரசு பதவி விலக வேண்டும் என்று யு.என்.பி உட்பட பல முக்கியஎதிர்கட்சிகள் விரும்புகின்றன. ஆனால் சந்திரிகா அரசு பதவி விலக மறுத்து வருகிறது. இந்தக் குழப்பமானசூழ்நிலையில் யு.என்.பி யையும் இணைத்து தேசிய அரசு அமைக்க வேண்டும் என்று அதிபர் சந்திரிகாவிரும்புகிறார்.

இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேச்சு நடத்தினார். அதற்கு தமிழர் கட்சிகள் எதிர்ப்புத்தெரிவித்தன. சில கட்சிகள் விருப்பம் தெரிவித்தன.

இந்நிலையில் சந்திரிகா அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் 38 பேர் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்.

இது பற்றி துணை அமைச்சர்களின் குழு செயலாளர் ஏக்நாயகே கூறுகையில், யு.என்.பி மற்றும் சில எதிர்கட்சிகள்மக்கள் கூட்டணியின் ஆட்சியைக் கலைக்க முயன்று வருகிறாகள்.

அதை முறியடிக்கவும், தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களைச் சமாளிப்பதற்காகவும் நாங்கள் அனைவரும்ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவெடுத்துள்ளார்கள். இதன்மூலம், அதிபர் எளிதாக எந்த முடிவையும் எடுக்கநாங்கள் அவருக்கு உதவியிருக்கிறோம். அதிபர் என்ன முடிவை எடுத்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம்என்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், யு.என்.பியுடன் சேர்ந்து தேசிய அரசு அமைக்க அதிபர் சந்திரிகா முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது.அதற்காகத் தான் இந்த 38 துணை அமைச்சர்களையும் ராஜினாமா செய்யும்படி கூறியுள்ளார் என்றும்கூறப்படுகிறது. ஆனால் சந்திரிகாவின் இந்த முடிவுக்கு யு.என்.பி செவிசாய்க்குமா என்று தெரியவில்லை.

இதற்கிடையில் மற்ற முக்கிய எதிர்கட்சிகளான மார்க்சிஸ்ட் கட்சி, ஜே.வி.பி போன்ற கட்சிகளை அனுகியிருக்கிறார்சந்திரிகா. அவர்களிடம் 1 வருட காலத்திற்கு நிபந்தனை அடிப்படையில் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்றுகோரியிருக்கிறார்.

அதன்படி ஜே.வி.பி விதித்த முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று அமைச்சர்களின் எண்ணிக்கையை 20 ஆகக்குறைக்க வேண்டும் என்பதாம்.

இதனால் தான் இப்போது 38 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஏக்நாயகே இதுபற்றிக் கூறும்போது, அரசு ஆதரவு எம்.பிக்களை தங்கள் பக்கம் இழுக்க யு.என்.பி.முயன்று வருகிறது. நாங்கள் யாருடைய தூண்டுதலாலும் தங்கள் பதவியை அமைச்சர்கள் ராஜினாமா செய்யமுன்வரவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+