சட்டசபையில் திமுகவுக்கு பா.ம.க. நோ
சென்னை:
தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் பாட்டாளி மக்கள் கட்சி சேரவில்லை என்று அக்கட்சித் தலைவர்ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
ஆனால் இதுவரை ராமதாஸ் கருணாநிதியைச் சந்தித்து பேசுவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதற்கிடையில்ராமதாஸ் வந்து என்னைச் சந்தித்தால் தான் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி அடிக்கடி கூறி வருகிறார்.
அதை ராமதாஸ் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மத்தியில் பா.ஜ.க. உடன் மட்டுமே கூட்டணி. தமிழகத்தில் திமுகவுடன்கூட்டணி இல்லை எனற நிலையில் தான் ராமதாஸ் இப்போது இருக்கிறார்.
இந் நிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவிலான தேசிய ஜனநாயக்கூட்டணியில்தான் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்துள்ளது. தமிழக அளவில் திமுக தலைமையிலான கூட்டணியில் இன்னும்நாங்கள் சேரவில்லை. தேவைப்படும்போது நாங்கள் கூட்டணியில் சேருவோம்.
மேலும், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நாங்கள் எந்தக் கட்சியுடனும் சேர்ந்து செயல்பட மாட்டோம். தனித்தேசெயல்படுவோம் என்று அறிவித்துள்ளார் மணி.
ஏற்கனவே திமுக வுடன் ஏற்பட்ட தொகுதி உடன்பாடு பிரச்சனையில் வைகோ தலைமையிலான மதிமுக திமுகவுடன் கூட்டணிஇல்லை என்று அறிவித்தது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இடம்பெறும். வாஜ்பாய் தான் எங்களுக்குகூட்டணித் தலைவர் என்று அறிவித்தது.
இதே நிலையைத்தான் இப்போது பா.ம.க கடைபிடிக்கப் போவதாகத் தெரிகிறது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications