தமிழக அரசு மீது எந்த மனவருத்தமும் இல்லை - ராஜகோபாலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசு அழைத்தவுடன் என்னை அனுப்ப மறுத்தால் தமிழக அரசின் மீது எனக்கு எந்த மன வருத்தமும்இல்லை என்று டி.ஜி.பி ராஜகோபாலன் கூறினார்.

மேலும் மகிழ்ச்சியோடு விடைபெற்று செல்வதாகவும் தெரிவித்தார்.

கடந்த திமுக ஆட்சியின் போது தமிழ போலீஸ் டி.ஜி.பி ஆக இருந்தவர் ராஜகோபாலன்.

அதிமுக அரசு பதவியேற்றவுடன் அந்தப் பதவியிலிருந்து அவரை விடுவித்து போலீஸ் பயிற்சிக் கல்லூரிஇயக்குநராக நியமித்தது.

இந்நிலையில் இவரை தேசிய பாதுகாப்புப் படை இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. மேலும் அவரை தமிழகஅரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசுக்கு ராஜகோபாலனின் சேவை மிகத் தேவை என்று கூறி அவரை அனுப்ப தமிழக அரசுமறுத்து வந்தது.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ராஜகோபாலனை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பப் போவதாக முதல்வர்ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து போலீஸ் பயிற்சிக் கல்லூரி இயக்குநர் பதவியிலிருந்து முறைப்படி விடுவிக்கப்பட்டார்.

பிறகு அவர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இதையடுத்து ராஜகோபாலன் தனது பொருப்புக்களை ஒப்படைத்தார்.

பிறகு ராஜகோபாலன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்தியாவில் உள்ள மிக மிக முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் பொருப்பை மத்திய அரசு எனக்குக்கொடுத்திருக்கிறது.

தேசிய பாதுகாப்புப் படை டி.ஜி.பி பதவியை மத்திய அரசு எனக்கு அளித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.இதற்காக மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என்னை விடுவித்த தமிழக அரசுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நான் எந்தப் பதவியாக இருந்தாலும் மனநிறைவோடுதான் செய்வேன்.

போலீஸ் பயிற்சிக் கல்லூரி இயக்குநராக இருந்தபோதும் முழு ஈடுபாட்டுடன் தான் பணியாற்றினேன்.

மத்திய அரசு என்னை அழைத்த போது முதலில் தமிழக அரசு என்னை அனுப்பி வைக்க மறுத்தது பற்றி பத்திரிக்கைவாயிலாகத் தெரிந்து கொண்டேன்.

அது மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் நடந்த தகவல் பரிமாற்றம்.

இதனால் தமிழக அரசின் மீது எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை.

தேசியப் பாதுகாப்புப் படைக்கு பெரும்பாலும் இராணுவத்தினர் தான் இயக்குநராக இருப்பார்கள். நானும் 6வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

தென்னிந்தியாவில் இருந்து அந்தப் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆள் நான்தான். இதற்காக நான்பெருமை அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+