பா.ஜ.க. மகளிர் அணி பதவியைத் துறந்தார் நடிகை விஜயசாந்தி
சென்னை:
பாரதீய ஜனதா கட்சி மகளிர் அணித் துணைத் தலைவி பதவியை நடிகை விஜயசாந்தி ராஜினாமா செய்தார்.
இவர் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னையில் திமுகவின்ர் நடத்தியபேரணியில் திமுகவினர் மீது போலீசார் எடுத்த நடவடிக்கைகள் ஆகிய விவகாரங்களில் அதிமுகவுக்கு ஆதராவாககுரல்கொடுத்து வந்தார்.
இதையடுத்து இவரது வீடு திமுகவினரால் தாக்கப்பட்டது. திடீரென ஒருநாள் ஜெயலலிதாவையும் போய் சந்தித்துபா.ஜ.க.-திமுக தலைவர்களுக்கு எரிச்சலூட்டினார். கொஞ்ச காலமாகவே பா.ஜ.கவில் அதிருப்தியுடன் இருந்துவரும் விஜயசாந்தி, இப்போது மகளிர் அணித் துணைத் தலைவி பதவியையும் ராஜினாமா செய்வதாகஅறிவித்துள்ளார்.
இவர் தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிரப்பதாவது,
கடந்த 12ம தேதி திமுகவினர் நடத்திய கண்டனப் பேரணியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக முன்னாள்கவர்னர் பாத்திமா பீவி ஆகியோருக்கு எதிராக திமுகவினர் எழுப்பிய ஆபாச கோஷங்கள் என் மனதைபுண்படுத்திவிட்டன.
நான் அரசியலைவிட, பதவியைவிட, பெண்களின் மானம் மரியாதைதான் முக்கியம் என்று நினைப்பவள்.
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பெண்களுக்கு எதிரான செயல்களை தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது.அதனால் நான் வகித்து வரும் பா.ஜ.க. மகளிர் அணித் துணைத் தலைவி பதவியை ராஜினாமா செய்கிறேன்.இவ்வாறு அந்த ராஜினாமா கடிதத்தில் நடிகை விஜயசாந்தி குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் சேருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் பா.ஜ.கவில் உறுப்பினராக நீடிப்பேன் என்றுகூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications