நான் ஆங்கிலம் பேசுவதில்லை, ஏன் தெரியுமா?...வாஜ்பாய் ஜோக்
டெல்லி:
நான் ஆங்கிலத்தில் பேசினால் அதைக் கொலை செய்துவிடுவேன் என்று பயமாக இருக்கிறது. அதனால்தான்ஹிந்தியில் பேசுகிறேன் என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
நான் ஹிந்தியில் பேசுவதற்கு காரணம், ஆங்கிலத்தை எதிர்ப்பதற்காக அல்ல. நான் ஆங்கிலத்தில் பேசினால் அதுகொடுமையாக இருக்கும் என்பதால் தான் என்று நகைச்சுவையாகக் கூறினார்.
இந்த விழாவில் மேலும் அவர் பேசியதாவது,
நான் பெரும்பாலும் ஹிந்தியில் பேசுவது வழக்கம். இதனால் நான் ஆங்கிலத்தை எதிர்க்கிறேன் என்றுநினைக்கவேண்டாம். நான் ஆங்கிலம் பேசினால் அது பயங்கர கொடுமையாக இருக்கும்.
இப்படித்தான் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின்போது ஒரு ஆங்கிலேயர் சொன்னார்.நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுகிறோம். ஆனால் உங்கள் போராட்டத்திற்கு பயந்து அல்ல. நீங்கள் பேசும்ஆங்கிலத்தை எங்களால் சகிக்க முடியவில்லை. அதனால்தான் என்றாராம். (உடனே கூட்டத்தில் பலத்த சிரிப்பொலிஎழுந்தது)
அந்த நிலையில் இருந்தது நமது ஆங்கில அறிவு. ஆனால் இப்போது நாம் இந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம்அடைந்துள்ளோம். மேலைநாடுகளில் தொழில்நுட்பத்தில் நம் இந்தியர்கள் தான் முன்னனியில் இருக்கிறார்கள்.
சீனா போன்ற நாடுகளில் மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்காகவே வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால்,நாம் அப்படி இல்லை. இன்று நமது நாட்டில் பெரும்பாலானவர்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இதற்காகநாம் பெருமைப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.












Click it and Unblock the Notifications