திமுக, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் சனிக்கிழமை காலை தொடங்கியது.

கூட்டம் தொடங்கியவுடன் சட்டசபையின் திமுக தலைவர் க. அன்பழகன் எழுந்து, கருணாநிதி கைது செய்யப்பட்டதுகுறித்தும், திமுக பேரணியில் போலீஸ் தாக்குதல் நடத்தியது குறித்தும் விவாதிக்க வேண்டும்.

மக்களுக்கு நல்லது செய்ய திட்டங்களைப் போட வேண்டிய மாநில அரசு அதை விட்டுவிட்டு எதிர்க் கட்சியினர் மீதுதாக்குதல் நடத்துவதிலும், பத்திரிக்கையாளர்களைத் தாக்குவதிலும் தான் கவனம் செலுத்தி வருகிறது இது குறித்துஇப்போது விவாதிக்க வேண்டும் என்றார்.

ஆனால், இதற்கு சபாநாயகர் காளிமுத்து அனுமதி மறுத்தார். இன்று தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர்பொன்னையன் தாக்கல் செய்வார். வேறு எதையும் விவாதிக்க அனுமதிக்க இயலாது என்றார்.

ஆனால், தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் குரல் கொடுத்தவண்ணம் இருந்தனர். ஜெயலலிதாவின்உத்தரவின்பேரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமைதியாக இருந்தனர்.

இதையடுத்து சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்திய திமுக எம்.எல்.ஏக்கள், தமிழகத்தில் போலீஸ் அராஜக ஆட்சிநடக்கிறது என்று கோஷம் போட்டவண்ணம் அன்பழகன் தலைமையில் சபையிலிருந்து வெளியேறினர்.

அவர்களைத் தொடர்ந்து திமுக ஆதரவு கட்சிகளான பாரதீய ஜனதா, எம்.ஜி.ஆர். அதிமுக கட்சிகளைச் சேர்ந்தஎம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். அவர்களும் அரசுக்கு எதிராக கோஷம் போட்டவண்ணம்வெளியேறினர்.

அப்போது அவையில் இருந்த ஜெயலலிதா எந்தவித சலனமும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+