நாளை முதல் பஞ்சாலை ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பஞ்சாலைத் தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்றவேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து, சனிக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முதலாளிகளுக்கும்தொழிலாளர்களுக்கும் இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர். வேலைநிறுத்தம் ஆரம்பித்த பிறகும் நல்லமுடிவு கிடைக்காவிட்டால், வரும் 28ம் தேதி மறியல் போராட்டம் நடத்தவும் பஞ்சாலைத் தொழிற்சங்கங்கள்கூறியுள்ளன.
இந்த வேலைநிறுத்தம் பஞ்சாலை முதலாளிகளுக்கு எதிரானதுதானே தவிர, தமிழக அரசுக்க எதிரானது அல்ல.எனவே, இந்த விஷயத்தில், தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications