காஷ்மீர்: 19 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சண்டை சம்பவங்களில்19 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 3 பாதுகாப்புப் படை வீரர்களும், 2 பெண்களும் பலியானார்கள்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய உல்டிலையில் இராணுவத்தினரின் சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்திய 3தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் காயத்துடன் தப்பிவிட்டனர்.
இவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து 1 ஏ.கே.47 ரகத்துப்பாக்கியும் மேலும் சில வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சண்டையில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் பலியானார். மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
பட்காம் மாவட்டத்தில் உள்ள பீர்வா தேசில் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரஷீத் மாலிக். இவர் முன்னாள்தீவிரவாதியாக இருந்துவிட்டு இப்போது சரணடைந்து விட்டார்.
இவர் வீட்டில் தீவிரவாதிகள் நுழைந்து, அவரது வீட்டில் இருந்த மாலிக்கின் மகள் இர்பானா, மற்றும் அவரதுஉறவினர் ஆயிஷா ஆகியோரைச் சரமாரியாக சுட்டுக் கொலை செய்தனர்.
இந்த வீட்டில் இருந்த மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். அப்போது மாலிக் வீட்டில் இல்லை என்பதால் அவர்உயிர் தப்பினார்.
இதேபோல ரஜெளரி மாவட்டத்தில் நவ்சேரா என்ற இடத்தில் டெரிக் அல் ஜிகாத் என்ற தீவிரவாத அமைப்பைச்சேர்ந்த 2 பேர் இந்திய எல்லைக்குள் நுழையும் போது, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் பட்கால்ஸ் காரி என்ற இடத்தில் போலீசாரும், இராணுவத்தினரும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் 2தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 2 ஏ.கே.56 ரக துப்பாக்கிகளும், 11 மேகசின்களும், ஒரு கைத்துப்பாக்கியும் மற்றும் பலவெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. இந்த சண்டையில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். மேலும் 3பேர் காயமடைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications