பாமக தலைமையில் புதிய கூட்டணி - ராமதாஸ்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் தமிழகத்தில் விரைவில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றுஅக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இதையடுத்து தமிழகத்தில் அந்தக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தலைவர் கருணாநிதியை ராமதாஸ்சத்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியும் ராமதாஸ் என்னை வந்து சந்தித்தால்கூட்டணியில் சேர்ப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று சொல்லி வந்தார். ஆனால் ராமதாஸ் அதைக்கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராமதாஸ், பாமக தலைமையில் புதியகூட்டணி ஒன்றை அமைக்கவிருப்பதாகக் கூறினார்.
இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் சட்டமன்றக் கூட்டங்களில் பாமக தனித்தே செயல்படும். விரைவில் பாமகதலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும். அந்தக் கூட்டணி விரைவில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்.
மேலும் மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருவதைப் போல, தமிழகத்தில் எங்கள் கூட்டணிதொடர்ந்து ஆட்சி செய்யும் என்றார். தற்போது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் பா.ம.க தனித்தேபோட்டியிடும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 40 சீட்டுகள் பா.ம.க தயவால் தான் அதிமுகவுக்குக் கிடைத்தது. இப்போதுநடந்து வரும் அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சியினரைப் பழிவாங்குவதையே முக்கிய பணியாகசெய்துவருகிறார்கள். மக்கள் பிரச்சனைகளைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.
போலீசார் பாரபட்சமின்றி சட்டப்படி செயல்பட வேண்டும். ஜெயலலிதா சொல்வதற்கெல்லாம் ஆடாமல் தங்கள்கடமையையும் அதிகாரத்தையும் உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.
சனிக்கிழமை நடந்த தமிழக பட்ஜெட்டின் போது, திமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தபோதுபாமகவினர் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications