துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் மனைவிக்கு நஷ்டஈடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் மனைவிக்கு ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் சேகர். தையல்காரராக இருந்தவர். அப்பகுதியில் நடந்த ஒரு கொலைதொடர்பாக மேச்சேரியைச் சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கு நின்று கொண்டிருந்த சேகர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார்.

இதைத் தொடர்ந்து சேகரின் மனைவி சிவகாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தார். அதில் தனது கணவர் மட்டுமேகுடும்பத்திற்கு சம்பாதித்துக் கொடுப்பவராக இருந்தார். அவர் துப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்டதால் குடும்பம் நிர்க்கதியாகிவிட்டது.

எனவே ரூ. 3 லட்சம் நஷ்டஈடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிமுருகேசன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டின்போது இறக்கும் நபர்களின் வாரிசுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஒன்றில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த சேகர், போராட்டக்காரர்களோடு நிற்கவில்லை என்றும் அவருக்கும், போராட்டத்திற்கும்சம்பந்தம் இல்லை என்றும் தெளிவாக தெரிய வந்துள்ளது.

எனவே சேகரின் மனைவி சிவகாமிக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ரூ. 3 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று தமிழகஅரசுக்கு உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+