பெற்ற தந்தையைக் கொன்ற மகள் கைது
சென்னை:
பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற மகள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக, அங்கப்பன் மற்றும் முத்தையா ஆகிய இருவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில்,வெங்கடாச்சலத்தின் மகள் சீதாலட்சுமி மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்படவே அவரைக் கைது செய்தனர்.விசாரணையில் தான்தான் தனது தந்தையை வெட்டிக் கொன்றதாக சீதாலட்சுமி ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்துக் கூறப்படுவதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதியரசு தேவர் என்பவரின் மகன் முருகனுக்கும், சீதாலட்சுமிக்கும் இடையேகாதல் மலர்ந்தது. காதலர்கள் எல்லை மீறவே சீதாலட்சுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து அவரை முருகனுடன்பெரியவர்கள் சேர்த்து வைத்தனர். ஆனால், சில நாட்களிலேயே சீதாலட்சுமியை விட்டுப் பிரிந்து விட்டார்முருகன்.
இதனால் அவமானமடைந்த சீதாலட்சுமியின் சதோகரர் செல்லத்துரை தற்கொலை செய்து கொண்டார். இன்னொருசகோதரர் சுடலை முத்து வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்குச் சென்று விட்டார்.
இதனால் வெங்கடாச்சலம் அதிர்ச்சியடைந்தார். தனது 2 மகன்களும் தன்னை விட்டுப் பிரிந்ததற்கு சீதாலட்சுமிதான்காரணம் என்று ஆத்திரமடைந்தார்.
இதனால் சீதாலட்சுமியை எப்போதும் திட்டிக் கொண்டிருந்தார். இதனால் சீதாலட்சுமி ஆத்திரமடைந்தார். தானேகாதலுடன் வாழ முடியாமல் தவித்துக் கொண்டுள்ளபோது, தந்தை வேறு சுடுசொற்களால் திட்டிக் கொண்டிருப்பதைஅவரால் தாங்க முடியவில்லை. இதையடுத்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
தனது தாய் மலையம்மாள் வழக்கமாக அதிகாலை மாடு மேய்க்க ஆற்றங்கரை சென்று விடுவதால் காலை 11மணியளவில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும் நேரமாகப் பார்த்துக் கொலை செய்ய முடிவுசெய்தார். அதன்படி வெள்ளிக்கிழமை காலை வெங்காடசலத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
பின்னர் தனது தாயிடம் சென்று, முத்தையாவும் அங்கப்பனும் சேர்ந்து தந்தையைக் கொன்று விட்டார்கள் என்றுகூறினார். அவர் உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் சீதாலட்சுமி மீது சந்தேகம்அடைந்து அவரை விசாரிக்கையில் உண்மை தெரிய வந்தது.
ஒரு வயது ஆண் குழந்தையுடன், திருச்சி சிறையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார் சீதாலட்சுமி.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications