மூப்பனார் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனாரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாக, அவருக்குசிகிச்சையளிக்கும் டாக்டர் தணிகாசலம் கூறினார்.
ஆபரேஷனுக்குப் பிறகு, படிப்படியாக உடல் நலம் தேறிவந்த மூப்பனாருக்குக் கடந்த வாரம் நிமோனியா காய்ச்சல்ஏற்பட்டது. இதையடுத்து, அவருடைய உடல் நிலை சீரியசானது.
ஆனாலும், டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். இதனால் அவருடைய உடல் நிலை தற்போதுசீராகத் தேறி வருகிறது. நன்கு பயிற்சி பெற்ற நர்சுகள் 24 மணி நேரமும் மூப்பனாருடைய உடல் நிலையை நன்குகவனித்து வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர், மூப்பனாருக்கு லேசான மூச்சிரைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு தற்போதுசெயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரைப் பார்க்க வரும் உறவினர்களையும், நண்பர்களையும்அடையாளம் கண்டுகொள்ள அவரால் முடிகிறது என்று டாக்டர் தணிகாசலம் கூறினார்.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவருடைய பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர்ஜெயலலிதா உட்பட அரசியல் தலைவர்களும் நண்பர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
மூப்பனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி, முன்னாள் மத்திய அமைச்சர்தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நடைபெற்றது.
இது தவிர, மூப்பனார் விரைவில் உடல் நலம் பெறுவதற்காக, கோவில்களில் பிரார்த்தனைகளும், சிறப்புவழிபாடுகளும் நடைபெற்றன. தமாகாவைச் சேர்ந்தவர்கள் பலர், சென்னை-வடபழனி கோவிலில் தங்கத் தேரைஇழுத்து, மூப்பனாருக்காகப் பிரார்த்தித்தனர்.
மேலும், ஜெயலலிதா, கருணாநிதி, இளங்கோவன், ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்களும்மருத்துவமனைக்குச் சென்று மூப்பனாரின் உடல் நலத்தை விசாரித்தனர். முன்னதாக, ஜனாதிபதி நாராயணன்மற்றும் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் ஆகியோரும் டெலிபோன் மூலம் மூப்பனாரின் உடல் நலம் குறித்துவிசாரித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications