Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபாநாயகரைத் திட்டிய பரிதி இளம்வழுதி 2 நாட்களுக்கு சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சபாநாயகர காளிமுத்துவை மிகக் கடுமையான வார்த்தையால் விமர்சனம் செய்த திமுக எம்.எல்.ஏ. பரிதிஇளம்வழுதி சட்டசபையில் இருந்து 2 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

2001-2002ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் திங்கள்கிழமைதொடங்கியது. அப்போது நடந்த விவாதம்:

பரிதி இளம்வழுதி:

இந்த பட்ஜெட்டில் புதிதாக எதுவுமே இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு கொண்டு வந்த 99 சதவீததிட்டங்களைத் தான் பட்ஜெட் என்ற பெயரில் அதிமுக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் எல்லாமேகலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.

குறிப்பாக, தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்பது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இப்போதுஎன்னமோ நீங்கள் தான் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தது மாதிரி பட்ஜெட் அறிக்கையில் கூறி உள்ளீர்கள்.

(இடையில் குறுக்கிட்ட) முதல்வர் ஜெயலலிதா:
தரிசு நில மேம்பாடு என்பது பல ஆண்டுகளால் பல அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமாகும். ஆனால்,இப்போது தான் இதற்காக அதிகபட்ச நிதியை ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தான் பட்ஜெட்டில் கூறினோம்.

இதையடுத்து பரிதி இளம் வழுதி ஜெயலலிதாவுக்கு பதில் கொடுத்து தொடர்ந்து பேசினார். ஜெயலலிதாவும்எழுந்து அவருக்கு பதில் தர இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

சபாநாயகர் காளிமுத்து:

பரிதி இளம்வழுதியின் பேச்சு ஒரே புலம்பலாக உள்ளது.

பரிதி இளம்வழுதி (சபாநாயகரை நோக்கி):

நீங்கள்...... (மிக ஆட்சேபகரமான வார்த்தையை உபயோகித்தார்)

சபாநாயகர் காளிமுத்து:

நீங்கள் வரம்பு மீறி பேசுகிறீர்கள்

பரிதி இளம்வழுதி:

நீங்கள் மட்டும்.... (தொடர்ந்து ஆட்சேபமான வார்த்தை)

இவ்வாறு பரிதி இளம்வழுதிக்கும் சபாநாயகருக்கும் இடையே மோதல் நடந்தபோது அதிமுக எம்.எல.ஏக்கள்அனைவரும் எழுந்து நின்று பரிதி இளம்வழுதிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து அதிமுகவினரை நோக்கித் திட்டினர். இதனால் அவையில் பெரும்அமளி ஏற்பட்டது. ஒரே கூச்சல்-குழப்பம் நிலவியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வார்களோ என்று அஞ்சும் நிலையில் சூழ்நிலை சூடானது.

இதையடுத்து பரிதி இளம்வழுதி தெரிவித்த அனைத்துக் கருத்துக்களும் அவைக் குறிப்பில் இருந்துநீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். (இதனால் பரிதி என்ன பேசினார் என்பதை பத்திரிக்கைகளிலும்வெளியிட முடியாது)

அப்போது பேசிய முஸ்லீம் லீக் உறுப்பினர் லத்தீப் கூறுகையில்,

நல்ல பல திட்டங்களைக் கொண்ட பட்ஜெட் மீதான விவாதத்தில் பரிதி இளம்வழுதி பேசிய முறை மிகவும்கண்டனத்துக்குறியது. அவரது கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது. அவர் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் கோஷம் போட்டனர். லத்தீபையும் திட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுகஉறுப்பினர்கள் திமுக எம்.எல்.ஏக்களை நோக்கி திருப்பி கோஷம் போட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள்மீண்டும் பாதிக்கப்பட்டன. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பரிதி இளம்வழுதியை அவையிலிருந்து 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தைநிதியமைச்சர் பொன்னையன் முன்மொழிந்தார்.

அப்போது எழுந்த எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன் பேசுகையில், பரிதியின் கருத்தைத் தான நீக்கிவிட்டீர்களே.இப்போது அவரை சபையில் இருந்து வெளிற்ேறத் தான் வேண்டுமா? ஏன் இரட்டைத் தண்டனை தருகிறீர்கள்என்றார்.

இதையடுத்து மீண்டும் திமுக-அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கோஷம் போட்டுக கொண்டு அமளி ஏற்படுத்தினர்.

அனைவரையும் அமைதியாக இருக்கச் சொன்ன சபாநாயகர் காளிமுத்து, 2 நாட்களுக்கு அவையில் இருந்து பரிதிஇளம்வழுதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று அறிவித்தார். இதை அதிமுக உறுப்பினர்கள் பெஞ்சுகளைத் தட்டிவரவேற்றனர்.

இதையடுத்து பரிதி இளம்வழுதி அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்போது மீண்டும் எழுந்த அன்பழகன், சபையை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவையைவிட்டு வெளியேறினார். அவருடன் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளியேறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+