ரூ. 300 கோடி சொத்து: சிக்குகிறார் பொன்முடி
சென்னை:
திமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த பொன்முடி என்றதெய்வசிகாமணி ரூ. 300 கோடி அளவுக்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்.
இந்த விவரங்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் திரட்டியுள்ளனர். இந்தவிவரங்களின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் கைது?
பொன்முடியிடம் நேரடி விசாரணை, பின்னர் கைது போன்ற நடவடிக்கைகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் பாயும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள்மீது ஊழல் வழக்குள் தொடரப்பட்டு அதை விசாரிக்க தனி நீதிமன்றமும் அமைத்ததுதி.மு.க. அரசு.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்ததும் பழி வாங்கும் நடவடிக்கைகள் எதுவும்எடுக்கப்பட மாட்டாது. ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றுஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனால், மேம்பால ஊழல் வழக்கில் தி.மு.க.தலைவர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டது. அதற்கு முன்பு புழுத்த அரிசி விவகாரம் தொடர்பாக விழுப்புரம்குடோனில் சோதனை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது போன்றவைஜெயலலிதா அரசு பழி வாங்கும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டு வருகிறது என்றசந்தேகத்தை எழுப்பியது.
கருணாநிதி கைது சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், முன்னாள்அமைச்சர்களை கைது செய்வது என்றால் எச்சரிக்கையுடன் செயல்படுவது என தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.
தற்போது லஞ்ச ஒழிப்பு விசாரணை போலீசாரின் விசாரணையில் சிக்கியிருக்கிறார்முன்னாள் அமைச்சர் பொன்முடி.
கிரானைட் ஆலை, மாம்பழ ஜூஸ் நிறுவனம்
இவர் கடந்த தி.மு.க.ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர்பொன்முடி. இவர் அமைச்சராக இருந்த காலத்தில் தன் அதிகாரத்தை பயன்படுத்திதமிழத்திலும், பிற மாநிலங்களிலும் வருமானத்த்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகலஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ஹைதராபாத்தில் மாம்பழ ஜூுஸ்பிழியும் இரண்டு ஆலைகள், பொன்முடியின் மகனின் பெயரில் உள்ளன. அதன் மதிப்புரூ 20 கோடிரூபாய்.
ஹைதராபாத்திலேயே பொன்முடிக்கு சொந்தமாக கிரானைட் தொழிற்சாலையும்உள்ளது, இதன் மதிப்பு ரூ 8 கோடி.
300 ஏக்கர் நிலம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள பாகலா என்ற ஊர் பொன்முடியின் மனைவியின்ஊர். இந்த ஊரில் பொன்முடி 300 ஏக்கருக்கு மாந்தோப்பு வாங்கியுள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள கப்பியாம் புலியூர் என்ற ஊரில் சிகா கல்வி அறக்கட்டளைசார்பாக நடத்தப்படும் உறைவிட பள்ளியும், அதற்காக வாங்கப்பட்ட 50 ஏக்கர் நிலமும்பொன்முடிக்கு சொந்தமானது.
துபாய் ஹோட்டலில் ஷேர்:
துபாயில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும் பொன்முடிக்கு முதலீடும் பங்குகளும்உள்ளன.
இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 300 கோடி என்கிறது போலீஸ்.
40 வீடுகள்:
இது தவிர பொன்முடியின் முன்னாள் உதவியாளர்கள் அன்பு, ரவி, கார்த்திகேயன்,ரவிசங்கர் ஆகியோரின் பெயர்களில் சென்னை, பெங்களூர், விழுப்புரம்,பாண்டிச்சேரிஆகிய ஊர்களில் 40 வீடுகளை பொன்முடி வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் ஆரம்ப கட்டவிசாரணைக்கு பிறகு. தற்போது எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்களுக்கான ஆவணங்களை தேடும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார்ஈடுபட்டுள்ளனர். அவை கிடைத்ததும், நேரடி விசாரணை, கைது போன்ற அடுத்தகட்டநடவடிக்கைகளில் இறங்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications