கருப்புப் பூனைப் படை தலைவரானார் ராஜகோபாலன்
டெல்லி:
தேசிய பாதுகாப்புப் படையின் (கருப்புப் பூனைப் படை) டைரக்டராக ஐ.பி.எஸ். அதிகாரி ராஜகோபாலன் இன்று(திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியின் அன்பைப் பெற்ற ராஜகோபாலன். பழிவாங்கப்பட்ட ராஜகோபாலனைஉள்துறை அமைச்சகத்தின கீழ் வரும் தேசிய பாதுகாப்புப் படையின் தலைவராக அத்வானி நியமித்தார்.
இதையடுத்து அவரை மாநில அரசுப் பதவியிலிருந்து விடுவிக்குமாறு மத்திய அரசு ஜெயலலிதாவுக்குஉத்தரவிட்டது. ஆனால், ராஜகோபாலனை விடுவிக்க ஜெயலலிதா மறுத்து வந்தார்.
கருணாநிதி கைது வழக்கில் தொடர்புடைய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசுப் பதவிக்கு அனுப்பும்விஷயத்தையும் ராஜகோபாலன் விவகாரத்தையும் சேர்த்து ஒன்றுடன் ஒன்று முடிச்சுபோட்டு தமிழக அரசுபிரச்சனையாக்கியாக்கியது.
இதன் காரணமாக ராஜகோபாலனால் தேசியப் பாதுகாப்புப் படைத் தலைவராக பதவியேற்க முடியவில்லை.இதனால், தேசிய பாதுகாப்புப் படை பல வாரங்களாக தலைவர் இல்லாமல் இயங்கி வந்தது. ராஜகோபாலனைத்தவிர வேறு யாரையும் அதில் நியமிக்க முடியாது என்று கூறிவிட்ட அத்வானி, அவர் வரும்வரை இந்தப் படையின்பொறுப்பாளராக மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர ஜெனரல் குர்பஜன் ஜகத்தை நியமித்தார்.
ஆனால், இவ்வளவு நடந்த பிறகும் கூட பிற போலீஸ் அதிகாரிகள் போல பேட்டி கொடுத்து தனது குமுறலைவெளிப்படுத்தாமல் மிக அமைதியாக கண்ணியம் காத்தார் ராஜகோபாலன்.
இந் நிலையில் தான் மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு இரண்டாவதாக ஒரு கடிதம் எழுதியது. அதில்ராஜகோபாலனை உடனடியாக விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் கடும் விளைவுகள் நேரிடும் எனக்கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து ராஜகோபாலனை மாநில அரசுப் பதவியிலிருந்து விடுவிக்க ஜெயலலிதா அரசு வேண்டா விருப்பாககடந்த வாரம் ஒப்புக் கொண்டது.
மாநில உள்துறையிடமிருந்து சில நாட்களுக்கு முன் ராஜகோபாலனுக்கு ஒரு தகவல் வந்தது. அதில், உடனே ஆள்அனுப்புங்கள், ஒரு கடிதம் தயாராக உள்ளது. அதை வாங்கிக் கொள்ளுகள் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து தனது உதவியாளரை ராஜகோபலன் கோட்டைக்கு அனுப்பினார். அவரிடம் தான் ராஜகோபாலனைமத்திய அரசுப் பதவிக்கு அனுப்பும் கடிதம் தரப்பட்டது.
கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ராஜகோபாலன் முதல்வர் ஜெயலலிதா மரியாதை நிமித்தமாக சந்தித்து அதற்குநன்றியும் தெரிவித்தார். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், எந்தப் பதவிக்குப் போனாலும்கொடுத்த பொறுப்பை நியாயமாக நிறைவேற்றுவேன். என்னை உடனடியாக விடுவிக்காமல் இழுத்தடித்ததால்தமிழக அரசு மீது எந்தக் கோபமும் இல்லை என்றார்.
திங்கள்கிழமை டெல்லி சென்ற அவர் தேசிய பாதுகாப்புப் படையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்தப் படையின் பொறுப்புத் தலைவராக இருந்த குர்பஜன் ஜகத் தனது பொறுப்பை ராஜகோபாலனிடம்ஒப்படைத்தார்.
1965ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜகோபாலன் விருப்பு வெறுப்பு இல்லாமல் பணியாற்றும் மிகநேர்மையான அதிகாரிகளில் ஒருவர். அடுத்து சி.பி.ஐ. இயக்குனர் பதவியும் கூட ராஜகோபாலனுக்காககாத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர் சி.பி.ஐ. இயக்குனரானால், நாம் சம்பந்தப்பட்ட வழக்குகளை கிண்டி கிழங்கு எடுத்துவிடுவாரே என்ற அச்சம்அதிமுக பெருந்தலைகளிடையே இப்போதே பரவி விட்டதாகக் கூறப்படுகிறது.
பதவியேற்றவுடன் பேசிய ராஜகோபாலன், தேசிய பாதுகாப்புப் படையை நவீனமாக்க நடவடிக்கை எடுப்பேன்என்றார்.
ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், வி.வி.ஐ.பிக்களுக்கு தேசிய பாதுகாப்புப் படை தான் 24 மணி நேரபாதுகாப்பு வழங்கி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications