சகோதரிகள் மீது ஆசிட் வீசிய 2 பேருக்கு குண்டர்கள் சட்டத்தில் சிறை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

நாகர்கோவில் பள்ளி மாணவிகள் மீது ஆசிட் ஊற்றிய இரண்டு இளைஞர்களும்குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சில தினங்களுக்கு முன் நாகர்கோவிலில் சகோதரிகளான சரிதா, சபிதா என்ற இருபள்ளி மானவிகள் மீது பைசல், ஆல்வின் என்ற இரு வாலிபர்கள் ஆசிட் வீசினர்.

இதில் இரண்டு பெண்களின் முகமும் கறுகிப் போனது. இந்த சம்பவத்துக்கு பல மாணவஅமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

சரிதா, சபிதா மீது ஆசிட் ஊற்றிவிட்டு தப்பி ஓடிய பைசல் நாகப்பட்டினம்நீதிமன்றத்தில் சரணடைந்தார். தலைமறைவாக இருந்த ஆல்வினை போலீசார் கைதுசெய்தனர்.

இவர்கள் இருவரும் விசாரணைக்காக நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர்.இருவரும் மாணவர்கள் மீது ஆசிட் ஊற்றியதை ஒப்புக் கொண்டனர்.

தாங்கள் மாணவிகளை காதலித்ததாகவும், அவர்கள் தங்கள் காதலை புறக்கணித்ததால்தங்களுக்கு கிடைக்காத அழகு வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதற்காகஅவர்கள் முகத்தில் ஆசிட் ஊற்றியதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து பைசல், ஆல்வின் இருவரையும் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் அடைக்கஉத்தரவிடுமாறு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டார்.

இதையடுத்து பைசல், ஆல்வின் இருவரும் பாளையங்கோட்டை சிறையில்அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+