ஜெயலலிதா 100: ஒரு அலசல்
சென்னை:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்று செவ்வாய்க்கிழமையுடன் 100நாட்கள் முடிவடைகின்றன.
அவருக்கு ஆளுநர் பாத்திமா பீவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தது தவறு என்றசர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் ஜெயலலிதா அதைப் புறந்தள்ளி விட்டு தமிழகஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
கடந்த முறை இருந்த ஜெயலலிதாவின் ஆட்சி இந்த முறை இருக்காது என்றமக்களின் நம்பிக்கையைப் பலமாகக் கொண்டு ஆட்சியமைத்த ஜெயலலிதாவின்நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே பரபரப்பும், அதிரடியும் நிரம்பியதாகவே உள்ளது.
முதல் கட்டமாக அதிகாரிகள் மாற்றத்தை மேற்கொண்டார். சென்னை நகர போலீஸ்கமிஷனராக இருந்த காளித்து மாற்றப்பட்டு முத்துக்கருப்பன் புது கமிஷனராகநியமிக்கப்பட்டார்.
சில நாட்களில் மாநில டிஜிபி ராஜகோபாலன் மாற்றப்பட்டு ரவீந்திர நாத் புதியகமிஷனராக நியமிக்கப்பட்டார். தலைமைச் செயலாளராக சங்கர் நியமிக்கப்பட்டார்.பல துறை செயலாளர்களும் மாற்றப்பட்டார்கள்.
மாவட்ட அளவில் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், கலெக்டர்கள் என சகலஅதிகாரிகளும் சகட்டு மேனிக்கு மாற்றப்பட்டனர். மாற்றப்பட்ட பலருக்கு எந்தப்பணியிடம் கொடுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.அவர்களுக்கு இன்னும் கூட பணி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் மாற்றத்தை மேற்கொண்ட கையோடு அரசியல்வாதிகள் மீது கை வைக்கத்தொடங்கினார் ஜெயலலிதா. அதற்கு முதல் பலி திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி.
எழும்பூர் சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் ஜான்பாண்டியன் மீதுவன்முறைத் தாக்கலில் ஈடுபட்டதாகக் கூறி பரிதி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் கூடவெளி வர முடியாத அளவுக்கு அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வேலூர்சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
பரிதி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது கமிஷனர்முத்துக்கருப்பன் சில தகவல்களை கோர்ட்டில் தெரிவித்திருந்தார். ஆனால் அதுபொய்யான தகவல் என்பது உயர்நீதிமன்றத்தில் பரிதி தாக்கல் செய்திருந்த அப்பீல்மனு மீதான விசாரணையின்போது தெரிய வந்தது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் முத்துக்கருப்பன் மன்னிப்பு கேட்டார். பின்னர்ஜாமீனில் வெளி வந்தார் பரிதி.
பரிதியைத் தொடர்ந்து கைதுகள் தொடர் கதையாகின. திமுக முன்னாள் எம்.பி.பரசுராமன், புரசைவாக்கம் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏ.ரங்கநாதன் என வரிசையாகக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் புரசைவாக்கம் ரங்கநாதன் ஜாமீனில் வெளிவரவே முடியாத அளவுக்குவரிசையாக வழக்குகள் போடப்பட்டன. ஒருவழியாக சமீபத்தில்தான் அவர் ஜாமீனில்விடுதலையாகி திருச்சியில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் திமுகஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டவை அனைத்தும் புழுத்த அரிசிஎன்று ஜெயலலிதா புகார் கூற அது தவறு என்று நிரூபிக்க விழுப்புரம் அரிசிக்கிட்டங்கிக்கு நிருபர்கள், புகைப்படக்காரர்கள் சகிதம் முன்னாள் அமைச்சர் பொன்முடிநுழைந்து அங்கிருந்த அரிசி நல்ல அரிசியே என்று நிரூபித்தார்.
அன்று இரவே பொமுடியும், அவருடன் சென்ற சன் டிவி செய்தியாளர் சுரேஷும்கைது செய்யப்பட்டனர்.
சன் டிவி நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட அது பத்திரிக்கையாளர்களிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல செய்தியாளர்கள் சென்றிருந்தும் கூட சன் டிவிநிருபரை மட்டும் கைது செய்தது அரசியல் நோக்கம் கொண்டது எனபத்திரிக்கையாளர்கள் கண்டித்தனர்.
தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் மனு கொடுக்க முயன்றனர். ஆனால் அவர்மனுவை வாங்க மறுத்து விட்டார். இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல்நடத்தினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications