ஆட்சியில் 100 நாள்: ஜெக்கு சபாநாயகர் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்திருப்பதையொட்டிஅவருக்கு சபாநாயகர் காளிமுத்து சட்டசபையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் முதல்வராக பதவியேற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 100 நாள்நிறைவடைகிறது.
செவ்வாய்க்கிழமை காலை அவை கூடியவுடன் சபாநாயகர் காளிமுத்து கூறுகையில்,
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.அவருக்கு நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 100 நாட்கள்ஆட்சி வெற்றிகரமாக நடந்துள்ளது என்றார்.
முதல்வருக்கு சபாநாயகர் வாழ்த்துத் தெரிவித்ததை அனைத்து அதிமுகஎம்.எல்.ஏக்களும் பலத்த கரகோஷம் செய்து வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications