போலீஸ் நிலையம் மீது புலிகள் பயங்கர தாக்குதல்: 15 போலீசார் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள அம்பாரை அருகே போலீஸ் நிலையத்தில் மீது விடுதலைப் புலிகள் நடத்திய திடீர்தாக்குதலில் 15 போலீசார் கொல்லப்பட்டனர். 3 புலிகள், 2 பொது மக்களும் பலியாயினர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு புலிகள் இந்த கடும் தாக்குதலை நடத்தினர்.

மின்னல் வேகத்தில் தாக்குதல் நடத்திய புலிகள் போலீஸ் நிலைய ஆயுத அறையில் இருந்த டி-56 ரகத்தைச் சேர்ந்த 29துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

கொழும்பிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள அம்பாரையை அடுத்த புறநகர் பகுதியில் உள்ள சென்ட்ரல் கேம்ப் போலீஸ்நிலையத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. இத் தாக்குதலில் 15 போலீசார் அந்த இடத்திலேயே இறந்தனர். 18 போலீசார்படுகாயமடைந்தனர்.

புலிகள் தாக்குதலையடுத்து போலீசாரும் திருப்பிச் சுட்டனர். இதில் 3 புலிகள் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து புலிகள் அருகாமையில் உள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமின் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்தப்படையினர் யாழ்பாணப் பகுதியில் ராணுவத்துடன் இணைந்து புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

போலீஸ் நிலையத்தின் மீது புலிகள் தாக்குதல் நடத்தியவுடன் இந்த முகாமில் இருந்த அதிரடிப்படையினர் அங்கு விரையமுயன்றனர். ஆனால், அதற்குள் அவர்களையும் முகாமிலேயே சுற்றி வளைத்து புலிகள் தாக்கினர். இதனால், போலீஸ் நிலையத்தைஇந்தப் படையினரால் காப்பாற்ற முடியவில்லை.

இந் நிலையில் போலீஸ் நிலையத்தின் மீது புலிகளின் ஆக்ரோஷமான தாக்குதல் தொடர்ந்தது. போலீசார் தப்பித்து காவல்நிலையத்தின் பின் பக்கமாக ஓடினர்.

இதைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த புலிகள் ஆயுதங்களைக் கைப்பற்றினர். இறந்து கிடந்த போலீசாரிடமிருந்தும காயமடைந்துகிடந்த போலீசாரிடமிருந்தும் துப்பாக்கிகள், குண்டுகளைப் பறித்தனர். திரும்பிச் செல்லும்போது இறந்து கிடந்த 3 போலீசாரின்உடல்களையும் எடுத்துச் சென்றனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் புலிகளின் தாக்குதல் தொடர்ந்தது. காலை 4.30 மணிக்கு தான் புலிகள் அங்கிருந்துவெளியேறினர்.

இந்தச் சம்பவத்தையடுத்து ராணுவமும், கூடுதல் அளவிலான போலீசாரும் அம்பாரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 24ம் தேதி கொழும்புவில் சர்வதேச விமான நிலையம் மற்றும் விமானப் படைத் தளத்தில் நடத்தப்பட்டதாக்குதலுக்குப் பிறகு புலிகள் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+