சட்டசபைக்கு குண்டு வைப்பேன் என்று மிரட்டவில்லை: திமுக எம்.எல்.ஏ. மறுப்பு
சென்னை:
சட்டசபைக் கட்டிடத்தைக் குண்டு வைத்து தகர்ப்பேன் என்று நான் கூறவில்லை, அதிமுக உறுப்பினர்கள் தான்என்னை சுட்டுவிடுவேன் என்று கூறினார்கள் என்று திமுக உறுப்பினர் அசோகன் கூறினார்.
இதை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் சபையைவிட்டு வெளியேறினார்கள். அப்போது திமுகஎம்.எல்.ஏ. அசோகன் என்பவர் சட்டசபையைக் குண்டு வைத்துத் தகர்த்து விடுவேன் என்று கூறியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாங்கள் அனைவரும் சபையை விட்டு அமைதியாக வந்து கொண்டிருந்தபோது அதிமுக உறுப்பினர்கள் தான்எங்களை நோக்கி ஓடிவந்தனர். பரிதி இளம்வழுதியைத் தாக்குவதற்காக பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும்ராஜாங்கம் போன்றவர்கள் ஓடிவந்தார்கள்.
அப்போது ஒரு எம்.எல்.ஏ., "வெளியே வந்தால் உங்களை எல்லாம் சுட்டுவிடுவேன்" என்று ஆத்திரத்துடன்கத்தினார். அதற்கு நான், "எங்கள் மீது வெடி குண்டு எரிந்தாலும் கவலைப்பட மாட்டோம்" என்று கூறினேன்.
அதைத் தான் நான் சட்டசபையை வெடி குண்டு வைத்து தகர்த்து விடுவேன் என்று சொன்னதாக அதிமுகவினர்திரித்துக் கூறிவிட்டனர். இவ்வாறு அசோகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications