போலீசாருக்கு ஒழுக்கம் கற்பிக்க ஜெ. முடிவு
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீசாருக்கும் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.
ஆனால், முதல்வர் ஜெயலலிதா தனது சுதந்திர தின உரையில் போலீசார் திறம்படச் செயல்பட்டு வருவதாகப்பாராட்டினார்.
மேலும் பட்ஜெட்டிலும் போலீசாருக்கு பல நலத்திட்டங்களை அறிவித்ததுடன், காவல்துறையை நவீனப் படுத்தவும்பல திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) சட்டசபையில் உறுப்பினர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு ஜெயலலிதாபதிலளித்தார். அப்போது போலீசாருக்கு நல்லொழுக்கப் பயிற்சிகள் அளிக்க சிறப்பு வகுப்புகள் எடுக்க அரசுதிட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து போலீசாருக்கும் பொது மக்களிடம் நட்புடனும், பணிவுடனும் நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்படும்.
இதன் மூலம் போலீசார் மீது பொதுமக்களிடம் இருக்கும் பயத்தைப் போக்கி, போலீசார் பொதுமக்களுக்குபாதுகாப்பு அளிப்பதற்காகவே உள்ளனர் என்ற எண்ணம் பொது மக்கள் மத்தியில் ஏற்பட வழி செய்யப்படும்.
அதே நேரத்தில் சமூக விரோதிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளுதல் பற்றியும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக டி.ஜி.பி. முதல் எஸ்.பி. வரை உள்ளமேலதிகாரிகளுக்கு நானே அவ்வப்போது அறிவுரைகள் வழங்கி வருகிறேன்.
ஏற்கனவே சமீபத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டிலும் இதுபற்றி எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.
காவல்துறையில் பணியாற்றும் மற்ற அனைத்து பிரிவினருக்கும் எஸ்.பி. ரேங்கில் உள்ள அதிகாரிகள் பயிற்சிஅளிப்பார்கள்.
இதற்காக அரசு 4.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்க முடிவெடுத்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் இன்னும் 5 நாட்களில்தொடங்கவிருக்கின்றன.
மேலும் முந்தைய அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் சிறப்பாகச்செயல்பட்டு வந்தன. அவை கடந்த திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டு கிடந்தன. இந்நிலையைப் போக்கிஅதற்குப் புத்துயிர் ஊட்ட கழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது இருக்கும் அனைத்து பெண் போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு புதியஅதிகாரிகளை நியமிக்க அரசு உத்தேசித்து வருகிறது.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications