ஸ்டாலின் வீட்டில் மனித உரிமை மீறல்: 3 போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன்
சென்னை:
ஸ்டாலினைக் கைது செய்யச் சென்றபோது, அவருடைய வீட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஸ்டாலின்கொடுத்த புகாரின் அடிப்படையில், 3 போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப மனித உரிமைகள் கமிஷன்உத்தரவிட்டுள்ளது.
போலீசார் மனித உரிமையை மீறும் விதமாத நடந்து கொண்டதாக, ஸ்டாலினின் மனைவி துர்கா மற்றும்ஸ்டாலினின் வீட்டில் பணியாற்றும் பணியாளர்களும், துணை மனு ஒன்றை சென்ற 8ம் தேதி தாக்கல் செய்து தங்கள்வாக்கமூலத்தை தெரிவித்திருந்தனர்,
இந்த மனு மீதான விசாரணை நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. நீதிபதிகள் சுவாமிதுரை மற்றும் சுசீலா ராஜ்ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர்.
போலீஸ் தரப்பில், டி.ஐ.ஜி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சார்பாக, பச்சையப்பன் மற்றும் ரகுநாதன் ஆகியவக்கீல்கள் ஆஜரானார்கள்.
அப்போது அவர்கள், "தங்களால் தற்போது விளக்கம் அளிக்க முடியாது மேலும் சில காலம் அவகாசம் தேவை"என்று கூறினர். "என்ன காரணம்?" என்று நீதிபதிகள் கேட்டபோது, "கடந்த 12ம் தேதி நடந்த திமுக பேரணியில்நடந்த வன்முறை காரணத்தால் தங்களால் இந்த வழக்குக்கு உரிய பதில் மனுவை தயாரிக்க முடியவில்லை"என்றனர்.
இதை ஏற்ற நீதிபதிகள் செப்டம்பர் மாதம் 6ம் தேதி போலீசார் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்என்று கூறினர்.
கிண்டி துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், உதவி கமிஷனர் சமுத்திர பாண்டியன், வேளச்சேரி இன்ஸ்பெக்டர்தாண்டவராயன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஸ்டாலின் தரப்பில், கல்யாண சுந்தரம் மற்றும் ராஜா இளங்கோ ஆகியோரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications