ஒட்டன்சத்திரத்தில் வாயில் கத்தியால் குத்தி பெண் கொலை; நகை கொள்ளை
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொள்ளைக் கும்பல் ஒரு பெண்ணின் வாயில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்து விட்டுச் சென்றது.
சுப்பிரமணி, தாராபுரத்தில் தங்கி வேலைசெய்துவிட்டு, வாரத்திற்கு 2 நாட்கள் விமுறையில் மட்டும்தான் வீட்டுக்குவருவார். இதனால் செல்வராணி தனது கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார்.
இதைத் தெரிந்து கொண்ட 4 பேர் அடங்கிய ஒரு கொள்ளைக்கும்பல், திங்கள்கிழமை மாலை 4 மணியளவில்செல்வராணியின் வீட்டுக்குள் புகுந்தது.
தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த செல்வராணி இந்த கூட்டத்தைப் பார்த்து திடுக்கிட்டார். பிறகுசுதாரித்துத் தப்ப முயலும் போது கொள்ளையர்கள் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டனர்.
பிறகு, "கழுத்தில் உள்ள நகைகளைக் கழற்றிக் கொடுக்கா விட்டால் குழந்தையைக் கொன்று விடுவோம்" என்றுமிரட்டினார்கள். இதையடுத்து செல்வராணியும் தனது நகைகளைக் கழற்றிக் கொடுத்து விட்டு, தனது குழந்தையைவாங்கிக் கொண்டார். அதன் பிறகு, "திருடன், திருடன்" என்று கத்த ஆரம்பித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் செல்ராணியின் வாயில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்கள்.இந்தச் சம்பவம் குறித்து யாருக்கும் தெரியவில்லை.
பிறகு 2 மணி நேரம் கழித்து 6.30 மணியளவில், செல்வராணியின் குழந்தை தொடர்ந்து அழுவதை பக்கத்துவீட்டினர் கேட்டனர். அவர்கள் வந்து பார்த்தபோது, வாயில் கத்தியுடன் செல்வராணி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சிஅடைந்தார்கள்.
உடனடியாக செல்வராணி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அந்தநேரத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லலப்பட்ார்.
ஆனால், அங்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே செல்வராணி பரிதாபமாக மரணமடைந்தார். இந்தச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications