நகை மட்டும் போதும்... நூதன திருடன் பிடிபட்டான்
சென்னை:
ஓடும் பஸ்களில் நகைகளை மட்டும் திருடும் நூதன திருடனை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து தனிப்படை அமைத்து திருடர்களைப்பிடிக்க ஆணையர் ஆணையிட்டார். இன்ஸ்பெக்டர் சுப்பையாதலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாறு வேடத்தில் சைதாப்பேட்டை பகுதியில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
சைதை பஸ் நிலையம் அருகில் அவர்கள் ரோந்தில் இருந்தபோது ஒரு நபர் சந்தேகம் அளிக்கும் விதத்தில் நடமாடிக்கொண்டிருந்தார். அவரை அணுகிய போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
உடனடியாக அவரை அள்ளிக் கொண்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த "கவனிப்பில்"அந்த நபர் தனது தகவல்களைக் கூறினார்.
இவரது பெயர் பிரகாஷ் என்ற சலீம். பஸ்களில் நகைகளைத் திருடுவது இவரது தொழிலாம். அதுவும் நகைகளைமட்டுமே திருடுவது இவரது வழக்கம். பணத்தைத் திருடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தாலும் கூட திருட மாட்டாராம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் அணிந்திருக்கும் தங்க நகைகளை திருடிக் கொண்டு நழுவி விடுவாராம்.அவரிடமிருந்து ரூ.50,000 மதிப்புள்ள நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications