ஜெ. வழக்குகள்: 17 அப்பீல் மனுக்களை சேர்த்து விசாரிக்க அரசு வக்கீல் கோரிக்கை
சென்னை:
டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 17 அப்பீல் மனுக்களையும்சேர்த்து ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று அரசு வக்கீல் வெங்கடபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
டான்சி நில ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சசிகலா உட்பட 6 பேர்அப்பீல் மனு செய்துள்ளனர். ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 420, 169 ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்களைத்தண்டிக்க வேண்டும் என்று அரசும் அப்பீல் மனு செய்துள்ளது.
இதேபோல சசி என்டர்பிரைசஸ் வழக்கில் வழங்ககப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சசிகலாஉட்பட 5 பேரும், தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசும் அப்பீல் மனு செய்துள்ளது.
மேலும் கொடைக்காணல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உட்பட 4 பேர்மனு செய்துள்ளனர்.
இந்த 2 வழக்குகளிலும் மொத்தம் 17 அப்பீல் மனுக்கள் உள்ளன. ஆனால் டான்சி வழக்கு சம்பந்தமான 2 மனுக்கள்மட்டும் தான் நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்கு வருகிறது.
இதில் 2 மனுக்களை மட்டும் விசாரணைக்கு எடுப்பது நல்லதல்ல. அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு எடுக்கவேண்டும். இதற்கு கால அவகாசம் வேண்டும். எனவே வருகிற 27 ம் தேதி நடக்கவிருக்கும் விசாரணையைத்தள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அரசு வக்கீல் தனது மனுவில் கூறியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications