ஐ.பி.எஸ். விவகாரம்: ஜெயலலிதாவுக்கு மே.வங்க முதல்வர் ஆதரவு
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை கமிஷ்னர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசுப்பதவிக்கு அனுப்பும் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ்பட்டாச்சார்யா ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் மாறன் மற்றும் பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட போதுபோலீசார் அத்து மீறி நடந்து கொண்டதாக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து இந்தக் கைது நடவடிக்கையில் தொடர்புடைய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை உடனடியாக மத்தியஅரசுப்பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வாஜ்பாய் அரசு ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டது.
ஆனால், இவர்களை திடீரென மத்திய அரசு அழைப்பதில் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியஜெயலலிதா அவர்களைத் சட்டப்படி மத்திய அரசு அழைக்க முடியாது என்று கூறிவிட்டார். அவர்களை அனுப்பமுடியாது எனவும் பதில் தந்துவிட்டார்.
இருந்தாலும் தொடர்ந்து அவர்களை அனுப்புமாறு மத்திய அரசு ஜெயலலிதாவை நிர்பந்தித்து வருகிறது.
இதையடுத்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதி, தனது நிலையை விளக்கினார். இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்குமாறும் கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து முதலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் தனது எதிர்ப்பை பிரதமர் அலுவலகத்திற்கும்,அந்தக் கடிதத்தின் நகலை ஜெயலலிதாவுக்கும் அனுப்பி வைத்தார். பிறகு பாண்டிச்சேரி முதல்வர் சண்முகமும்நிருபர்களிடம் பேசும்போது மத்திய அரசுக்குத் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பிரதமர் வாஜ்பாய்க்கு இது குறித்து ஒரு கடிதம்எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் நகல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு,
தமிழகத்தில் பணியாற்றும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை, அந்த மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் மத்தியஅரசுப் பணிகு அனுப்ப வேண்டும் என்று கேட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் பணியாற்றி வரும் அதிகாரிகளை அழைக்க நினைப்பது மாநில அரசின்உரிமைகளில் தலையிடுவது போன்றதாகும். மத்திய அரசின் இந்தச் செயல் காலம் காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவந்த மரபுகளை மீறும் வண்ணம் உள்ளது.
மேலும் அது மத்திய-மாநில அரசுகளுக்கிடையில் நிலவும் சுமூக உறவுகளைப் பாதிக்கும் என்பதை மத்திய அரசுபுரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது வரை ஜெயலலிதாவின் வடவடிக்கைக்கு ஆதரவாக 3 முதல்வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும்கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் விரைவில் இதுகுறித்து தனது கருத்தை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.
முதல்வர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியும் ஒரு கடிதம் எழுதினார்.தனது கடிதத்துடன் முரசொலி மாறன் எழுதிய நள்ளிரவு கைதுகள் என்ற புத்தகத்தையும் அனுப்பி வைத்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications