காட்பாடி விபத்து குறித்து சட்டசபையில் மாஜி அமைச்சர் தர்ணா
சென்னை:
வேலூர் மாவட்டம் காட்பாடி வெடி மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக சட்டசபையில்உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமானதுரைமுருகன் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா செய்தார்.
அப்போது சபாநாயகர் காளிமுத்து, "சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தயாராக இருந்தால் உடனடியாக விவாதத்தைவைத்துக் கொள்ளலாம்" என்றார்.
உடனே தொழில்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் எழுந்து, "வெடிவிபத்து தொடர்பான சில தகவல்கள் தனக்குத்தேவைப்படுவதால் விவாதத்தை வெள்ளிக்கிழமை காலை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.
அதை ஏற்காத துரைமுருகன், "உடனடியாக விவாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கோரிக்கை நிறைவேறும்வரை சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா செய்வேன்" என்று கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில்ஈடுபட்டார்.
அப்போது அமைச்சர் வைத்தியலிங்கம் எழுந்து, "பிற்பகலில் இது தொடர்பான விவாதத்தை வைத்துக்கொள்ளலாம்" என்றார்.
இதையடுத்து, "அமைச்சர் விவாதத்திற்கு ஒத்துக் கொண்டு விட்டார். துரைருகன் அவரது இருக்கைக்குத் திரும்பவேண்டும்" என்று சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற துரைமுருகன், தனது இருக்கைக்குத் திரும்பினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications