எம்.பிக்கள் அமளி செய்தால் இனிமேல் சஸ்பெண்ட்
டெல்லி:
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் எம்.பிக்கள் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட்செய்யப்படுவார்கள் என சபாநாயகர் பாலயோகி அறிவித்துள்ளார்.
சமீப காலங்களில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் அமளி செய்வது சர்வ சாதாரணமாகப் போய்விட்டது. எந்த எந்தப்பிரச்சனைக்குத்தான் ரகளை செய்வது என்ற வரைமுறையே இல்லாமல், எம்.பிக்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள்.
சபாநாயரின் முன் கூடி நிற்பது, அவையில் மத்தியப் பகுதியில் வந்து நின்று அரசுக்கு எதிராக
கூச்சல் போடுவது அதிகரித்து வருகிறது.
இதனால், நாடாளுமன்றம் மணிக்கணக்கில் ஒத்தி வைக்கப்படுகிறது. பல நேரங்களில் நாள் கணக்கில் கூட நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் சண்டைபோடும் இரு கட்சிகள் தங்கள் மோதலை நாடாளுமன்றத்திலும் நடத்தி அதன்மரியாதையைக் கெடுத்து வருகின்றனர்.
இது அதிமுக, திமுக, சமாஜ்வாடி கட்சி, லல்லு பிரசாத் யாதவின் ஜனதா தளம், சிவசேனை ஆகிய கட்சிகளுக்கு மிகவும் பொருந்தும்.
சமீப காலத்தில் தெஹல்கா - ராணுவ பேர ஊழல், யூடிஐ ஊழல் உள்பட பல பிரச்சனைகளில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிஎம்.பிக்களிடம் சிக்கி, சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
அதிமுக-திமுக மோதல்:
பல நேரங்களில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களே ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கருணாநிதி கைது சம்பவம், திமுகபேரணி வன்முறை போன்ற சம்பவங்களைக் கையில் எடுத்துக் கொண்ட திமுகவினர், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பெரியரகளையே பண்ணிவிட்டார்கள்.
சென்னை பேரணியின்போது தன்னைப் போலீசார் தாக்கினார்கள் என்று கூறிய திமுக எம்.பியான வெற்றிச் செல்வன் தன்னுடையசட்டையைக் கழற்றி, அரை நிர்வாணமாய் நின்று நாடாளுமன்றத்தையே கேலிப் பொருளாக்கினார். வெறும் வேட்டியுடன்நாடாளுமன்றத்திற்குள் சுற்றி சுற்றி வந்தார்.
இதற்கு அதிமுக எம்.பிக்கள் கண்டனம் தெரிவிக்க, இரு கட்சியினரும் தமிழில் ஒருமையில் திட்டிக் கொணடனர். இதையடுத்துநாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்பொருமுறையும் அதிமுக-திமுக எம்.பிக்கள் தமிழில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள ஒன்றும் புரியாமல் பிற மாநிலஎம்.பிக்கள் முழிக்க சண்டை வலுத்ததையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்திற்குள் வந்தவுடனேயே ஏதாவது ஒரு பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு ஒன்றைத் தயாராகக் கையில்எடுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கோஷம் போட ஆரம்பித்து, பின்னர் திடீரென்று நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்குச் சென்று, கத்திக் கொண்டே இருப்பது இப்போதைய டிரண்ட் ஆகிவிட்டது.
தூங்கும் மசோதாக்கள்:
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல், சபாநாயகரும் பரிதாபமாக முழித்துக் கொண்டிருப்பார்.
"அமைதியாக இருங்கள், இருக்கையில் சென்று அமருங்கள்" என்று அவர் பலமுறை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டேஇருப்பார். ஆனாலும், எம்.பிக்கள் தொடர்ந்து ரகளை செய்து கொண்டே இருப்பார்கள்.
சபாநாயகரும் தொடர்ந்து கெஞ்சி, கொஞ்சிப் பார்ப்பார். கடைசியில், வேறு வழியில்லாமல், சபையை ஒத்திவைத்து விட்டுத்தான்செல்வார். சில முறை பகல் வரை மட்டும் ஒத்திவைக்கப்படும் நாடாளுமன்ற நடவடிக்கைகள், பல முறை நாள் முழுவதும்ஒத்திவைக்கப்படும் நிகழ்ச்சியும் தற்போது அடிக்கடி நடந்து வருகிறது.
நாடாளுமன்றத்தைக் கூட்டுவதால் ஏராளமான செலவும் ஆகிறது. குறித்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள்,அவ்வப்போது பைல்களிலேயே தூங்க ஆரம்பித்து விடுகின்றன. இதற்கு அப்புறம், ஒப்புதல் பெற வேண்டிய மசோதாக்களும்குறித்த நேரத்தில் சட்டமாக முடியாமல் போய்விடுகிறது.
5 நாட்கள் சஸ்பெண்ட்:
தற்போது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் எம்.பிக்களின்கோஷம் அமைந்தால், அந்த எம்.பிக்கள் அடுத்து வரும் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவர்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்கச் செய்யும் அமளி-ரகளைகளைத் தடுப்பதற்காக, வியாழக்கிழமை காலை நடந்தஅனைத்துக் கட்சி நாடாளுமன்றத் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற வரலாற்றில், இதற்கு முன் இதுபோன்ற நடவடிக்கை எப்போதும் எடுக்கப்பட்டதில்லை. இனியாவது எம்.பிக்கள்ஒழுங்காக நடந்து கொள்வார்களா என்பதை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில்தான் பார்க்க வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications