விஜய்காந்தின் பொறியியல் கல்லூரி திறப்பு
சென்னை:
நடிகர் விஜய்காந்த் கட்டியுள்ள இன்ஜினியர் கல்லூரி இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
சென்னையிலிருந்து மதுராந்தகம் செல்லும் வழியில் மாமண்டூரில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியைக் கட்டியுள்ளார்விஜய்காந்த். இந்தக் கல்லூரியை விஜய்காந்தே வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
கல்லூரித் தலைவரும் விஜய்காந்தின் மனைவியுமான பிரேமலதா குத்துவிளக்கேற்றினார்.
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரித் திறப்பு விழாவின்போதே தனது பிறந்தநாளையும் விஜய்காந்த் கொண்டாடினார். பின்னர் பலருக்கு உதவிகளையும்வழங்கினார்.
அப்போது விஜய்காந்த் பேசுகையில்,
நான் படிக்காதவன், அதனால் தான் அடுத்தவர்களை படிக்க வைத்து மகிழ்கிறேன். நாமே சொந்தக் கல்லூரி தொடங்கினால்இன்னும் பலரை படிக்க வைக்கலாமே என்ற யோசனையில் பிறந்தது தான் இந்தக் கல்லூரி.
ஈவ்-டீசிங் செய்யாமல் இந்தக் கல்லூரி மாணவர்கள் ஒழுங்காக படிக்க வேண்டும். இங்கு நன்றாகப் படித்து வெளியேறும்மாணவர்களுக்கு நாங்களே வேலை வாங்கித் தருவோம் என்றார் விஜய்காந்த்.
ஆண்டுதோறும் தனது பிறந்தநாள் விழாவின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு படிக்க உதவி செய்வது விஜய்காந்தின்வழக்கம். அதே போல நன்றாக படிக்கும் மாணவர்கள் பண வசதி இல்லாமல் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்தால்அவர்களை விஜய்காந்த் தேடிப் போய் உதவி வருகிறார்.
இவரது உதவியால் கல்வி பெற்ற மாணவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications