பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நாளை கவுன்சலிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பொறியியல் பிரிவுகளில் அனுமதி மறுக்கப்பட்டமாணவ, மாணவியருக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் மீண்டும்கவுன்சலிங் நடத்தப்படவுள்ளது.

பொறியியல் கல்லூரிகளுக்கான ஒற்றைச் சாளர கவுன்சிலிங் சமீபத்தில் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் நடந்தது.

இதன்படி தமிழகம் முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள்அனுமதிக்கப்பட்டனர். இதில் நிகர் நிலை பல்கலைக்கழங்களும் அடங்கும். ஆனால்ஒற்றைச் சாளர முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அதைஎதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பல்கலைக்கழகங்களின் கோரிக்கையை நிராகரித்தது.ஒற்றைச் சாளர முறையில் நிகர் நிலை பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர் சேர்க்கைநடத்தப்பட்டது சரியானதே என்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவ,மாணவியர் அங்கு சேர சென்றனர். ஆனால் அவர்களை தங்களது நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் மறுத்து விட்டன. மேலும் உயர்நீதி மன்றத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தன.

அப்பீலை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. ஒற்றைச் சாளரமுறையில் அனுமதிக்கப்பட்ட உத்தரவையும் செல்லாது என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் நிலை கேள்விக்குறியானது.இதையடுத்து அவர்களை வேறு கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கைஎடுக்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தர் கலாநிதியும் அறிவித்தனர்.

வியாழக்கிழமை அவர்களுக்கு திரும்பவும் கவுன்சலிங் நடக்கும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூறியபடி நடக்கவில்லை. இதனால்வெளியூர்களிலிருந்து வந்திருந்த மாணவ, மாணவியர் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு கவுன்சிலிங் நடக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது,நிநகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் அனுமதிமறுக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு வேறு கல்லூரிகளில் இடம் கொடுக்கப்படும் என்றுதமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது.

மேலும், பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர கடைசி தேதியை இந்தமாதம் 30ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+