இலங்கை ஆல்--அவுட்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு
கண்டி:
இலங்கையில் நடைபெற்று வரும் இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் கிரிக்கெட்போட்டியின் 3-வது நாளான இன்று 221 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும்இழந்தது. இதையடுத்து இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி பேட் செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள்எடுத்திருந்தது. அதை அடுத்து ஆட வந்த இந்திய அணி 232 ரன்களிலேயே 10 விக்கெட்களையும் பறிகொடுத்தது.
42 ரன்கள் முன்னணி என்ற நிலையில் 2-வது இன்னிங்சில் களம் இறங்கிய இலங்கை அணி வெறும் 221 ரன்களில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் மட்டும் அதிகபட்சமாக 67 ரன்களை எடுத்தார். அவர் சந்தித்த பந்துகளின்எண்ணிக்கை 65 மட்டுமே. இவரைத் தவிர அணியின் துவக்க ஆட்டக்காரர் அட்டபட்டு 45 ரன்கள் எடுத்ததுகுறிப்பிடத்தக்கது. மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணியைப் பொருத்தவரை பிரசாத்தின் பந்து வீச்சு இன்று அபாரமாக இருந்தது. இவர் 72 ரன்கள்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஜாஹீர் கானும் 76 ரன்கள் தந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடத் துவங்கியுள்ளது. இந்தியஅணியின் துவக்க ஆட்டக்காரர் சிவ்சுந்தர்தாஸ் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட் ஆகிவிட்டார். 3-வது நாளில் இறுதியில் இந்திய அணியின் ஸ்கோர் 55 ரன்கள்.
இப்போதைக்கு இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற நல்ல வாய்ப்புள்ளது. இதை இந்தியா பயன்படுத்திக்கொள்கிறதா என்பது நாளை தெரியும்.












Click it and Unblock the Notifications