தலித்களுக்கு துப்பாக்கி வழங்கவேண்டும்- கிருஷ்ணசாமி
சென்னை:
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு உடனடியாகதுப்பாக்கிகள் வழங்கவேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.
தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு உடனடியாக அவர்களுக்கு துப்பாக்கிவழங்கவேண்டும்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே தூத்துக்குடி புதூர்பாண்டியபுரத்தைச் சேர்ந்த புதியதமிழகம் பிரமுகர் ராமன் கொலை செய்யப்பட்டார். பிறகு சில நாட்களிலேயே மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் பொருளாளர் முடக்காத்தான் பாண்டி கொலை செய்யப்பட்டார்.
பிறகு சமீபத்தில் ஜான்பாண்டியன் கட்சியைச் சேர்ந்த கணேச பாண்டியன் மற்றும் வெள்ளை ஆகியோர் குண்டு வீசிகொலை செய்யப்பட்டனர்.
நெல்லை கருங்காடு பகுதியைச் சேர்ந்த புதிய தமிழகத்தின் முன்னோடிகள் முனுசாமி மற்றும் சுரேஷ் ஆகியோர்கொல்லப்பட்டனர்.
மேலும் ஏராளமான தலித் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலித் மக்கள் மீது சில ஆதிக்க சாதியினர் நடத்தும் தாக்குதல் அதிகரித்துவருகின்றன. ஆனால் அந்த சமுதாயத்தினரின் ஆதரவு தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கருதி அவர்களைத்தட்டிக் கேட்கத் தமிழக அரசு தயங்குகிறது.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. இந்த தாக்குதல்களில் இருந்து தலித்மக்களைக் காக்க ஒரே வழி அவர்களுக்கு தமிழக அரசு துப்பாக்கிகள் வழங்குவதுதான்.
இதுபோன்ற நடைமுறைகள் பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளன.
மேலும் வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் மதுரையிலிருந்து நடைபயணமாகப் புறப்பட்டு எல்லா கிராமங்களிலும்புதிய தமிழகம் கட்சிக் கொடியை ஏற்ற முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications