தூத்துக்குடியில் தீ: ரூ.1 கோடி காய்கறிகள் சேதம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள ஒரு காய்கறி ஏற்றுமதி கிட்டங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் மொத்தம் ரூ.1கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின.
இந்தக் காய்கறி கிட்டங்கியின் மேல்கூரையில் நேற்று திடீரென தீப்பற்றிக் கொண்டது. கிட்டங்கியின் மேற்கூரைதட்டிகளால் வேயப்பட்டிருந்ததாலும், காற்று வேகமாக வீசியதாலும் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.
மேலும் கூரையின் மூங்கில் தீயில் கருகி வெடித்துச் சிதறியதால், பக்கத்தில் உள்ள வல்கனைசிங் கடை, ஓட்டல்மற்றும் எஸ்.டி.டி. பூத் ஆகியவற்றிலும் தீ பரவத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்தததும் தூத்துக்குடி, சிப்காட், தெர்மல் நகர் மற்றும் கனநீர் ஆலை ஆகிய இடங்களில்இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கின.
கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் கிட்டங்கியில் இருந்த காய்கறிகள்,மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தீவிபத்து குறித்து கிட்டங்கியின் மேனேஜர் தனபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் தட்டப்பாறை போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications