தமிழகத்துடன் பேச கர்நாடகம் தயார்... ஆனால்
பெங்களூர்:
காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத்தயாராக இருப்பதாகவும், ஆனால் தமிழகம் கோரியுள்ளது போல வரும் 26ம் தேதிபேச்சுவார்த்தை நடத்த முடியாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து கர்நாடக அதிகாரிகளுடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்து தமிழகபொதுப்பணித்துறை அமைச்சரையும், தலைமைச் செயலாளரையும் வரும் 26ம் தேதிகர்நாடகம் அனுப்பி வைப்பதாகவும் கர்நாடக முதல்வர் எஸ். எம். கிருஷ்ணாவுக்கு தமிழகமுதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தகர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் கூறுகையில்,
காவிரி நதி நீர் பங்கீடு குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகம்தயாராக உள்ளது.
ஆனால், தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளபடி வரும் 26ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. ஏனென்றால் அன்று முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பிரதமர் கூட்டியுள்ளமுதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி செல்லவிருக்கிறார்.
மேலும் நானும் ஹுப்ளியில் வறட்சி நிலவி வரும் இடங்களை பார்வையிடசெல்லவிருக்கிறேன்.
நான் திரும்பி வந்த பின் முதல்வருடன் கலந்து ஆலோசித்து பேச்சுவார்த்தை குறித்த தேதிதமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications