காட்பாடி வெடி விபத்து: இறந்தவர் குடும்பத்துக்கு ரூ 3.75 லட்சம்
சென்னை:
காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்த நிரந்தரஊழியர்களின் குடும்பத்துக்கு குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 3.75 லட்சம்வழங்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் சட்டசபையில்தெரிவித்தார்.
அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் கூறுகையில், வெடிவிபத்து நடந்த தினத்தன்று வெடி பொருட்கள் ஏற்றிய லாரி அங்கிருந்து தப்பிசென்றுள்ளது.
இந்த தொழிற்சாலையிலிருந்து அடிக்கடி வெடி பொருள்கள் கடத்தப்பட்டுள்ளன.விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் வேலூர் அருகேயும், செக்போஸ்ட் அருகே மர்மமனிதர் ஒருவர் பிடிபட்டுள்ளனர்.
விபத்தில் இறந்த மர்ம பிணமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
எம்.எல்.ஏ. சிவபுண்ணியம்:
வெடி மருந்து தொழிற்சாலையில் வெடிபொருள் கடத்தல் அதிகமாக நடந்துள்ளது.நிர்வாகத்தின் செயல்பாடு சந்தேகப்படும் விதத்தில் அமைந்துள்ளது.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும்.விபத்து குறித்து .தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அமைச்சர் வைத்தியலிங்கம்:
த.மா.கா. எம்.எல்.ஏ. மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் கூறிவற்றைகேட்டபின்பு அவர்களுக்கு பதில் அளித்து தொழில்துறை அமைச்சர் வைத்தியலிங்கம்கூறியதாவது:
காட்பாடி வெடிமருத்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்ட போது, வெடிபொருட்கள் ஏற்றிய லாரி எதுவும் தப்பிச் செல்லவில்லை.
வெடிமருந்து திரிகளை இணைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது விபத்துநடந்தது.
அப்போது அந்த யூனிட்டில் 12 தற்காலிக ஊழியர்களும், நிரந்தர ஊழியர்கள் 22பேரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விபத்தின் காரணமாக சம்பவ இடத்திலேயே 22 பேர் இறந்து போனார்கள். மீட்புபணியின் போது மீட்கப்பட்ட 2 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து நடந்த போது அருகில் இருந்த யூனிட்டில் பணியில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள்காயமடைந்தனர். அவர்களில் ஒருவரும் இறந்து விட்டார்.இவரையும் சேர்த்துவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 தான்.
ஞானசேகரன் கூறியது போல் வேலூர் செக்போஸ்ட் அருகே காயமடைந்த யாரும்பிடிபடவில்லை. மர்ம் பிணம் கைப்பற்றப்படுவதாக கூறப்படுவதும் தவறு.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் அரசுசார்பில் நஷ்ட ஈடு ஏற்கனவே தரப்பட்டு விட்டது. மேலும் விபத்தில் இறந்து போனநிரந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 3.75லட்சம் வழங்கப்படும்.
இறந்து போன தற்காலிக ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தனி நபர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கும்.
இந்த விபத்தையடுத்து, வெடிமருத்து தொழிற்சாலைக்கு அருகில் பொது மக்கள்கட்டிடம் கட்டுவதற்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளது.
விபத்து நடந்த யூனிட்டை தவிர மற்ற யூனிட்டுகளில் உற்பத்தி துவங்கி விட்டது.விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கைகிடைத்ததும் எதிர்காலத்தில் இது போன்று விபத்து நடக்காத வகையில் நடவடிக்கைஎடுக்கப்படும்.
வெடிமருத்து தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகள், லைசன்ஸ்பெற்ற டீலர்கள் மூலமாகத்தான் விற்பனை செய்யப்படுகிறது.
வெடிமருந்து வாங்கும் டீலரின் பெயர், அவர் அதை எடுத்துச் செல்லும் இடம்,லாரியின் எண் ஆகியவை ஒவ்வொரு முறையும் குறிக்கப்படும்.
இந்த தகவல்கள் உடனடியாக மாவட்டஎஸ்.பிக்கும், வெடிமருத்து கட்டுப்பாட்டுத்துறைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
நாக்பூரில் உள்ள வெடிமருத்து கட்டுப்பாட்டு தலைமை அலுவலகத்துக்கும் இந்ததகவல்கள் மாதந்தோறும் தெரிவிக்கப்படுகிறது என்று கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications