விநாயகர் ஊர்வலம்: முதல்வருக்கு இந்து முன்னணி நன்றி
சென்னை:
விநாயகர் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்கு தமிழக முதல்வருக்கு இந்துமுன்னணி தலைவர் ராம. கோபாலன் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்துவரும் 25, 26, 30ம் தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது.
ஆனால், அசம்பாவிதம் நடக்கக்கூடும் என்று கூறி விநாயகர் சிலை ஊர்வலத்திற்குதடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்கூறியிருந்தார்.
இதற்கு சிவசேனா கட்சியும், இந்து மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. காவல்துறையின் தடையையும் மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவோம் என்றும்அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் விநயாகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடைபெறும் என்று இந்துஅமைப்புகள் எழுத்து மூலமாக உறுதி அளித்திருப்பதால் விநாயகர் சிலைஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதாதெரிவித்தார்.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததற்கு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சென்னையில்வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் 25,26 மற்றும் 30ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் விநாயகர் சிலைஊர்வலத்தை நடத்த அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
போலீஸ் பாதுகாப்பு:
தமிழக அரசு விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் சென்னையின்பல பகுதிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
மேலும் விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகளிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications