சன் டிவி மீது வழக்குப் பதிவு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி அதிரடியாக கைது செய்யப்பட்டபோது அந்தச் சம்பவத்தை அடிக்கடி டிவியில் ஒளிபரப்புச் செய்துவன்முறையைத் தூண்டியதாக சன் டிவி நிர்வாகம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்தவழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சன் டிவி நிர்வாகம் மீது இப்ராகிம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளதாகவும் (எப்.ஐ.ஆர்.) கூறப்படுகிறது.
கருணாநிதி கைதானவுடன் பொது மக்கள் அதைக் கண்டிக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. பல பொது மக்கள் சன் டிவிஅலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்துமாறு மாநகர காவல்துறை ஆணையர் முத்துக் கருப்பன் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. ஆனால், கருணாநிதி கைது செய்யபட்ட சம்பவம் அடிக்கடி ஒளிபரப்பட்டது.இன்னும் கூட அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த காட்சிகளில் டி.ஐ.ஜி. முகமது அலியை மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தாக்கும் காட்சி மட்டும் இல்லை.போலீசார் முரசொலி மாறனை தூக்கி தனியே வீசும் காட்சி மட்டும் தான் உள்ளது.
ஆனால், ஜெயா டிவியில் காட்டப்படும் வீடியோவில் முகமது அலியை மாறன் தனது மோதிரக் கையால் முகத்தில் குத்தும் காட்சிஇடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சி கிராபிக்ஸ் முறையில் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications