சட்டசபையில் ஜெ.-ஸ்டாலின் சுவையான வாக்குவாதம்
சென்னை:
திமுகதான் மரபுகளை மீறுகிறது என்று முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுகதான் மரபுகளை மீறுகிறது எனசட்டசபையில் ஜெயலலிதாவும் சென்னை மேயர் ஸ்டாலினும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.
ஆனால் மேயர் இதுவரை என்னை வந்து சந்திக்கவில்லை. திமுக மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிஎன்று அந்தக் கட்சியின் தலைவர் அடிக்கடி பேசிவருகிறார். ஆனால் மரபுப்படி மேயர் ஸ்டாலின் ஏன் இன்னும்என்னை வந்து சந்திக்கவில்லை? என்று கேட்டார்.
எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன் கூறியதாவது,
தற்போது நிலவிவரும் மாறுபாடான அரசியல் சூழ்நிலை காரணமாகத்தான் மேயர், முதல்வரைச் சந்திக்கவில்லை.மற்றபடி சந்திக்கக் கூடாது என்ற கொள்கையை நாங்கள் ஆதரிப்பவர்கள் இல்லை. எனவே இதுகுறித்துஆளுங்கட்சியினர் தவறாக நினைக்க வேண்டாம் என்றார்.
இதைத்தொடர்ந்து சென்னை மேயரும் எம்.எல்.ஏவுமான ஸ்டாலின் கூறியதாவது,
மரபை மீறுவது நாங்கள் அல்ல. அதிமுகதான் மீறுகிறது. முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு சென்னை மேயரைஅழைக்க வேண்டும் என்பது மரபு. அதை நீங்கள் மதித்து என்னை வரவேற்றீர்களா? என்றார்.
உடனே முதல்வர் குறிக்கிட்டு, பதவியேற்பு விழாவிற்கு அழைப்பிதழ்கள் யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதுஎனக்குத் தெரியாது. ஆளுநரின் செயலாளர் தான் அழைப்பிதழ்களை அனுப்பினார். இருந்தாலும் இது குறித்துவிசாரிக்கிறேன் என்றார்.
இதையடுத்து பேசிய சபாநாயர் காளிமுத்து, இனியாவது மரபுகள் கடைபிடிக்கப்படுமா. இனியாவது முதல்வரைஸ்டாலின் சந்தித்தும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், மாநகராட்சியைக் கலைக்கும் எண்ணத்தை தமிழக அரசு கைவிட்டால் இது போன்றமரபுகளைக் கடைப்பிடிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ஒரே போடாய் போட்டார்.
இனிமேலாவது, மாநகராட்சியும் தமிழக அரசும் தங்களுக்கிடையில் சுமூக உறவை மேம்படுத்த முயற்சி செய்யவேண்டும் என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
ஸ்டாலினை முதல்வர் ஜெயலலிதா கார்னர் செய்தபோது அதிமுகவினரும், ஜெயலலிதாவை ஸ்டாலின்மடக்கியபோது திமுகவினரும் மேஜைகளைத் தட்டி பெரும் ஆராவாரம் செய்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பின் அவையில் ஜெயலலிதாவும் ஸ்டாலினும் நேருக்கு நேர் மிக சுவையான விவாதத்தில்ஈடுபட்டனர். அவையே மிக ஆர்வத்துடன் இருவரின் சொற்போரையும் ரசித்தது.
ஸ்டாலினுக்கு ஜெயலலிதாவும் ஜெயலலிதாவுக்கு ஸ்டாலினும் சிரித்துக் கொண்டே தான் பதில் கொடுத்துக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications