நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக சந்திரலேகா சாட்சியம்
சென்னை:
ஸ்பிக் நிறுவனத்தில் டிட்கோவுக்கு (தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்)சொந்தமான பங்குகளை ஸ்பிக் நிறுவனத்துக்கே விற்றுவிட வேண்டும் என்றுஅப்போதைய முதல்வர் தான் (ஜெயலலிதா) முடிவெடுத்தார் என்று முன்னாள் ஐ.ஏ.ஏஸ்.அதிகாரியும், ஜனதா கட்சியின் தமிழத தலைவருமான சந்திரலேகா நீதிமன்றத்தில்சாட்சி அளித்தார்.
அரசுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் தொழில் துறைச்செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் ஸ்பிக் உரிமையாளர் ஏ.சி. முத்தையா ஆகியோர்தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு தற்போது முதலாவது தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தவழக்கில் டிட்கோவின் முன்னாள் தலைவரும், ஐ.ஏ.ஏஸ். அதிகாரியும், ஜனதாகட்சியின் தமிழக தலைவருமான சந்திரலேகா முக்கிய சாட்சியாகசேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன்அனுப்பப்பட்டது. ஆனால் அவர், ஸ்பிக் விவகாரம் தொடர்பாக எந்த ஆட்சியில்திராவகம் வீசப்பட்டதோ, அதே ஆட்சிதான் தற்போது நடந்து வருகிறது. அதனால்வழக்கு முடியும் வரை எனக்கு மத்திய அரசின் துணை ராணுவ பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்து சி.பி.ஐ. கூறுகையில், இது குறித்து மத்திய அரசுக்குதெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது. இதன் காரணமாக சிலவாய்தாக்களில் ஆஜராகுமாறு சந்திரலேகாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
ஆனால், வெள்ளிக்கிழமை சந்திரலேகா நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில்அவருக்கு மாநில போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
சந்திரலேகா அளித்த சாட்சியம்:
நான் 1992ம் ஆண்டு தமிழக அரசுக்கு சொந்தமான டிட்கோ நிறுவனத்தின் தலைவராகநியமிக்கப்பட்டேன். அப்போது ஸ்பிக் பங்குகளை வாங்க திட்டமிடப்பட்டிருந்தது.
டிட்கோவின் சார்பில் தமிழக தொழில் துறைச் செயலாளர் ராமச்சந்திரன் கடிதம் ஒன்றைஅனுப்பினேன்.
அதில் ஸ்பிக் நிறுவனத்தில் முதலீடு செய்யும் வகையில் (பங்குகளை வாங்க) ரூ.12.71கோடி முன் பணமாக தருமாறு கோரியிருந்தேன். ஆனால், 1992ம் ஆண்டு மார்ச்மாதம் வரை எந்த விதமான பதிலும் வரவில்லை.
மார்ச் மாதம் 7ம் தேதி தான் தொழில்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது.அந்தக் கடிதத்தில், டிட்கோவுக்கு சொந்தமான ஸ்பிக் பங்குகளை ஸ்பிக்குக்கே விட்டுக்கொடுக்கும்படி கூறப்பட்டிருந்தது.
ஸ்பிக் பங்குகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது அரசாணையா? என்றுகேட்டு செயல் இயக்குனருக்கு கடிதம் அனுப்பினேன்.
இந்த கடிதத்திற்கு 1992ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி, அரசாணைதான் என்று அரசுசெயலாளர் பதில் அனுப்பினார்.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அப்போதைய அரசு குறிப்பாக முதல்வர்தான்(ஜெயலலிதா) டிட்கோவின் பங்குகளை ஸ்பிக் நிறுவனத்திற்கே விற்றுவிடும்படி முடிவுசெய்துள்ளார். இதனால் டிட்கோவுக்கு ஏற்படும் லாப-நஷ்டத்தைக் கணக்கிடஅனுமதிக்கவில்லை.
ஸ்பிக் பங்குகளை விட்டுக் கொடுத்தது குறித்து விளக்கம் கேட்க அப்போதையமுதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றேன். ஆனால் என்னை அவர்சந்திக்கவில்லை.
பின்னர் தலைமைச் செயலாளர் வெங்கட்ராமனிடம் இது குறித்து தெரிவித்தேன்.தொழில்துறைச் செயலாளரிடமும் தெரிவித்தேன். அதற்கு அவர், இது முதல்வரின்உத்தரவு, அதைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார் என்று சந்திரலேகாசாட்சியம் அளித்தார்.
சந்திரலேகாவை குறுக்கு விசாரணை செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றுஜெயலலிதா, ராமச்சந்திரன் மற்றும் முத்தையா ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
இந்த மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், வழக்கைவரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மத்திய பாதுகாப்பு:
நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு வந்த சந்திரலேகா செய்தியாளர்களிடம்கூறுகையில், எனக்கு சி.பி.ஐ. எந்த பாதுகாப்பும் வழங்கவில்லை.
நீதிமன்ற உத்தரவை மதித்து சாட்சியம் அளிக்க வந்தேன். இன்று மட்டும் எனக்கு தமிழகஅரசு பாதுகாப்பு அளித்துள்ளது. மத்திய அரசு பாதுகாப்பு கேட்டிருந்தேன். பாதுகாப்புஅளிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications