இலங்கை டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி
கண்டி:
இந்தியா - இலங்கைக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி தொடரின்இரண்டாவது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
264 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் இந்தியா நேற்று(வெள்ளிக்கிழமை) களமிறங்கியது. ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 55ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று சிவசுந்தர் தாஸ் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ராகுல் டிராவிட் 11 ரன்களுடனும், சடகோபன் ரமேஷ் 15 ரன்களுடனும்ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இவர்கள் இருவரும் இன்று (சனிக்கிழமை) தொடர்ந்து ஆடினார். ரமேஷ் 31 ரன்கள்எடுதிதருந்த போது ஃபெர்னான்டோ வீசிய பந்துக்கு ஜெயசூர்யாவிடம் காட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார், அப்போது அணியின் ஸ்கோர் 103.
ரமேஷ் அவுட் ஆனவுடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலிகளமிறங்கினார். கங்குலி சமீப காலமாக சரியாக விளையாடாமல் இருந்தார்.
இவர் நீண்ட நேரம் நிலைத்து ஆடுவாரா? அதிக ரன்கள் எடுத்து இந்திய அணியின்வெற்றிக்கு உதவுவாரா? என்ற சந்தேகம் நிலவி வந்தது.
அனைவரையும் சந்தேகத்தையும் போக்கி சிறப்பாக விளையாடினார் கங்குலி. 98ரன்களைக் குவித்தார்.
டிராவிடும், கங்குலியும் பொறுமையாக ஆடி, அடிக்க வேண்டிய பந்துகளை அடித்துஅணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்று விடும் என்றநம்பிக்கை உதித்த நிலையில் முரளிதரன் வீசிய பந்தில் ஆர்னால்டிடம் காட்ச் கொடுத்துஆட்டமிழந்தார் ராகுல் டிராவிட்.
திராவிட் 123 பந்துகளை சந்தித்து 75 ரன்கள் குவித்தார். அப்போது அணியின் ஸ்கோர்194.
அணியின் கேப்டன் கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார் முகமது கைஃப். இவரும்சிறப்பாகவே ஆடினார்.
இவர் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
78வது ஓவரின் 4வது பந்தில் இந்தியா வெற்றி இலக்கான 264 ரன்களை எட்டியது.
கங்குலி மிகச் சிறப்பாக ஆடி 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 264 ரன்கள் எடுத்து இலங்கையைவென்றது. 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 4வது நாளே இந்தியா வெற்றிபெற்றுவிட்டது.
முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது. தற்போது இரண்டாவது டெஸ்டில்இந்தியா வெற்றி பெற்றிருப்பதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்தற்போது 1-1 என்ற சம நிலையை அடைந்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் மேன் ஆப் த மேட்ச் விருது சிறப்பாக ஆடிய கங்குலிக்குவழங்கப்பட்டது.
3வது இறுதி டெஸ்ட் போட்டி வரும் 29ம் தேதி கொழும்பு நகரில் நடக்கவுள்ளது.அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோகோ - கோலா கோப்பையை வெல்லும்.
இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் இறுதி டெஸ்ட் மிகசுவாரஸ்யமாக இருக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications