குமரியில் தொடரும் "ஈவ் டீசிங்" கொடுமைகள்
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கல்லூரி மாணவி ஒருவர் ஈவ்டீசிங் கொடுமை தாங்காமல் நேற்று விஷம் குடித்து தற்கொலைசெய்துகொண்டார்.
நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிபள்ளம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அமுதா. கல்லூரி மாணவியான அமுதாநாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்து வருகிறார்.
இவரது தந்தை அய்யப்பன் ஒரு மீன்வியாபாரி, தாய் சாந்தவதி வீட்டில் வேலைசெய்து வருகிறார்.
இவர்களுக்கு சொந்த ஊர் களியங்காடு. ஆசாரி பள்ளத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.
இவர்களது 2 வது மகள்தான் அமுதா. அமுதாவுக்கு அனிதா என்ற அக்காளும், சியாம்ராஜ் என்ற தம்பியும்உள்ளனர்.
அமுதா கடந்த சுதந்திர தினத்தன்று கோவிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஜோன்ஸ்என்ற இளைஞன் வழிமறித்து, எங்கு சென்று வருகிறாய்?, இன்று தான் லீவ் ஆச்சே? என்று கேட்டிருக்கிறான்.
அதற்கு அமுதா, நான் எங்கு போனால் உனக்கென்ன? என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஜோன்ஸ் அமுதாவிடம், நீ எங்கோ சென்று விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறாய் என்று சொல்லியிருக்கிறான்.இதைக் கேட்டு மனம் நொந்த அமுதா வேகமாக வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் நடந்ததைச் சொல்லிஇருக்கிறார்.
அவர்கள் அமுதாவுக்கு ஆறுதல் கூறியதுடன், இனிமேல் அவன் இதுபோல பேசினால் போலீசில் புகார்கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் ஜோன்ஸ் தனது கேலிப் பேச்சை நிறுத்தவில்லை. தொடர்ந்து அமுதாவைக் கிண்டல் செய்துவந்தான்.
இதையடுத்து மேலும் மனம் வெதும்பிய அமுதா விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜோன்ஸை தேடி வருகிறார்கள்.
தற்கொலைக் கடிதம்:
போலீசார் ஜோன்ஸ் தான் அமுதாவின் தற்கொலைக்குக் காரணம் என்று அவனைத் தேடிக்கொண்டிருக்கும் போது,அமுதா தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் என் சாவுக்குக் காரணம் "ரமேஷ்" தான்என்று எழுதியுள்ளார்.
இதையடுத்து, ரமேஷ் என்பவர் யார். ஜோன்ஸின் மற்றொரு பெயரா அல்லது அவனது நண்பன் பெயரா என்றுஆராய்ந்து வருகிறார்கள்.
இது பற்றிய தகவல் அறிவதற்காக 2 பேரைப் போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
அமுதாவின் தற்கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு தான் தக்கலை அருகில் உள்ள மேக்காமண்டபத்தைச் சேர்ந்தசபீதா, சரிதா ஆகிய 2 சகோதரிகள் ஆசிட் வீசித் தாக்கப்பட்டனர். இதில் படு பயங்கரமாக முகம் வெந்த நிலையில்அந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
மேலும் ஒழுகினசேரி பகுதியைச் சேர்ந்த லட்சுமிப்ரியா சில ஆண்டுகளுக்கு முன்பு ஈவ் டீசிங் கொடுமையால் தான்பலியானார்.
இவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து ஈவ்டீசிங் கொடுமைகள் நடந்து வருகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications